அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? : முதல்வரை சந்திக்கிறார் எல்.முருகன்

 

அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? : முதல்வரை  சந்திக்கிறார் எல்.முருகன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்கிறார்.

அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? : முதல்வரை  சந்திக்கிறார் எல்.முருகன்

இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் முதல்வருடன் எல். முருகன் இன்று சந்தித்து பேசுகிறார். தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி – எல்.முருகன் சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – பாஜக இடையே முதல்வர் வேட்பாளர், கூட்டணி தொடர்பாக பிரச்சினை இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்கிறது.

அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? : முதல்வரை  சந்திக்கிறார் எல்.முருகன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என பாஜக நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்து வரும் நிலையில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி என அதிமுக பிரச்சார கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசியிருந்தார்.

அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? : முதல்வரை  சந்திக்கிறார் எல்.முருகன்

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “அதிமுகவுக்கு ஆபத்து இருப்பது போலவும் , அச்சம் இருப்பது போலவும் தோன்றுகிறது. அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள், நிர்வாகிகள் பேசியதை பார்க்கும் போது அச்சத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அதிமுக யாருக்கும் பயப்பட தேவையில்லை” என்றார்.