காட்டை விட்டு ஊருக்குள் புகுந்த யானை -கிணற்றில் விழுந்து தவித்தது -நாலு மணி நேர போராட்டத்திற்கு பிறகு துள்ளி குதித்தது..

காட்டை விட்டு ஊருக்குள் புகுந்த யானை -கிணற்றில் விழுந்து தவித்தது -நாலு மணி நேர போராட்டத்திற்கு பிறகு துள்ளி குதித்தது..

கேரளாவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து கிணற்றில் விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்
புதன்கிழமை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பூயான்குட்டி அருகே ஏழு வயதுடைய ஒரு காட்டு யானையொன்று வழித்தவறி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து ,அங்கிருந்த கிணற்றில் விழுந்துள்ளது .ஆனால் காலையில் தான் உள்ளூர் மக்கள் யானை கிணற்றில் சிக்கி தவிப்பதை கண்டு
அதை வெளியே எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்காக ஒரு ஜே.சி.பி இயந்திரம் மூலம் கிணற்றின் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டு யானை கிணற்றிலிருந்து வெளியே வர வழி செய்தனர் .
வெளியே வந்த யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை உதைத்து, சாலை ஓர வேலியினை தாண்டி, ஓடையில் நீந்தி, அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தது.

காட்டை விட்டு ஊருக்குள் புகுந்த யானை -கிணற்றில் விழுந்து தவித்தது -நாலு மணி நேர போராட்டத்திற்கு பிறகு துள்ளி குதித்தது..

இப்படி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வன அதிகாரிகள் அகழிகளை தோண்ட வேண்டும் அல்லது மனித குடியிருப்புக்கு அருகில் இருக்கும் வனப்பகுதிகளில் மின்சார வேலி அமைக்கவேண்டுமென்று வன அதிகாரிகளிடம் உத்தரவாதம் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தை நடத்தினர்.
அவர்களின் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் ஆறு மாதங்களில் மின்சார வேலி அமைப்பதாக உள்ளூர்வாசிகளுக்கு உறுதியளித்தனர், இது இந்த காட்டு விலங்குகளை மனித குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும்.