76 வயது கணவருக்கு கொரோனா : கொரோனா வார்டிலேயே தங்கி கவனித்து கொண்ட 66 வயது மூதாட்டி!

76 வயது கணவருக்கு கொரோனா : கொரோனா வார்டிலேயே தங்கி கவனித்து கொண்ட 66 வயது மூதாட்டி!

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த 76 வயது முதியவர் மதனகோபால் . இவருக்கு லலிதா என்ற மனைவி உள்ளார். மதனகோபால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மனநிலை பாதிப்பு இருந்துள்ளது , இதனால் இவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

76 வயது கணவருக்கு கொரோனா : கொரோனா வார்டிலேயே தங்கி கவனித்து கொண்ட 66 வயது மூதாட்டி!

66 வயதான இவரது மனைவி லலிதா கணவருக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் அவரை விட்டு செல்லாமல் மருத்துவரின் அனுமதி பெற்று கொரோனா வார்டிலேயே தங்கி 10 நாட்களாக அவரை கவனித்து வந்துள்ளார். இதனால் மூதாட்டியின் லலிதாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவருக்கு கொரோனா இல்லை என்றே முடிவு வந்துள்ளது. மன உறுதியுடன் நம்பிக்கையுடனும் கணவருக்காக 10 நாட்களாக கொரோனா வார்டிலேயே தங்கிய மூதாட்டி லலிதா பூரண குணமடைந்த தனது கணவரை வெற்றிகரமாக வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

76 வயது கணவருக்கு கொரோனா : கொரோனா வார்டிலேயே தங்கி கவனித்து கொண்ட 66 வயது மூதாட்டி!

இவர்களை மருத்துவர்கள் மருத்துவ மனையில் வாயில் வரை வந்து கையசைத்து அனுப்பி வைத்தது அங்குள்ளவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கொரனோ வந்தாலே இறந்துவிடுவோம் என்று பலர் பயந்து நடுங்கும் நிலையில் இந்த முதியவரும் அவரின் மனைவியும் உறுதியாக நின்று கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளது பலருக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம்.