குடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை… கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…

 

குடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை… கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற இளநீர் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள சொக்குபிள்ளை பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார்(38). இளநீர் வியாபாரி. இவரது மனைவி மல்லிகா (25). குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சசிகுமார், மல்லிகாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் குறித்து மல்லிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விளாம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

குடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை… கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…

இந்த கொலை சம்பவம் குறித்த வழக்கின் விசாரணை, திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி புருஷோத்தமன், இளநீர் வியாபாரி சசிகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அத்துடன், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனை அடுத்து சசிகுமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.