• March
    29
    Sunday

Main Area

Main



"30 பெண்களுடன் உல்லாச வீடியோ; புகைப்படங்கள்" திருமணமான 2 மாதத்தில் மனைவிக்கு ஷாக் கொடுத்த வங்கி ஊழியர்!

 எட்வின் ஜெயக்குமார்
எட்வின் ஜெயக்குமார்

திருச்சி மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்த எட்வின் ஜெயக்குமார்.  விராலி மலை இந்தியன் வங்கிக் கிளையில் கேஷியராகப் பணிபுரிந்து வரும் இவருக்கும்  தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவி இருவரும் மணப்பாறையில் வசித்து வந்த நிலையில் எட்வின் விராலி மலைக்கு வேளைக்கு வேலைக்கு  சென்று வந்துள்ளார். 

ttn

இந்நிலையில் எட்வினுக்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போன் மற்றும் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து மெசேஜ்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. அவரும் மணிக்கணக்கில் போன் பேசிவந்துள்ளார். இதனால் அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இல்லாத நேரத்தில் போனை எடுத்து பார்த்தபோது அவருக்கு  அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பல பெண்களுடன் போட்டோ மற்றும் வீடியோக்களில்  நெருக்கமாக இருந்ததை  கண்டுள்ளார். இதுகுறித்து கேட்டபோது, இதெல்லாம் கண்டுகொள்ளாதே, அதையும் மீறி  யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண் போலீசில்  இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். 

ttn

இதுகுறித்து பேசியுள்ள எட்வினின் மனைவி, எங்களுக்கு திருமணமான இரண்டு மாதங்களில் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் பலருடன் போனில் ஆபாசமாக பேசுவார். நான் அவரின் போனில் 30ற்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச புகைப்படங்களை பார்த்தேன். சிலரை தொடர்புகொண்டு பேசியதில் என்னிடம் பேசிய ஒருவர், அவருக்கு திருமணம் ஆனது தெரியாது. என்னை கர்ப்பமாக்கி கருவை கலைத்துவிட்டார் என்று கூறினார். நான் அவரை பற்றி தெரிந்துகொண்டதை அறிந்த அவர் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். மாடியில்  நின்று கொண்டு அக்கம் பக்கம் பெண்களை  ஆபாசமாகப் புகைப்படம் எடுப்பார். வங்கிக்கு வரும் பெண்களை ஏமாற்றி அவர்களின் ஆபாசமாகப் புகைப்படம் வீடியோ எடுத்துவைத்து மிரட்டி வந்துள்ளார். இதற்கு அவர் வீட்டில் உள்ளவர்களும் உடந்தை.

ttn

வங்கி கேஷியர் என்ற போர்வையில் பல பெண்களை சீரழித்து வந்த அவரை பற்றி  டி.ஐ.ஜி லோகநாதனைச் சந்தித்துப் புகார் கூறினேன். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை  அறிந்ததால், முன்ஜாமீன் பெற்றிருந்தார் எட்வின். அதை ரத்து செய்ய வேண்டும் என அவர் மொபைலில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்துப் புகைப்படங்களையும் ஆதாரமாகக் கொண்டு மனுத்தாக்கல் செய்தேன். இதைப் பார்த்த நீதிபதி, இதுபோன்ற ஒருவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அது எனக்கு கிடைத்த முதல் வெற்றி. முக்கியமாக அவரின் வேலையை  பறிக்கவேண்டும்  என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.


 எட்வின் ஜெயக்குமார் மீது பெண்களைத் துன்புறுத்துதல், ஆபாசப் படம் எடுத்து மிரட்டுதல், கொலை மிரட்டல், வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

2018 TopTamilNews. All rights reserved.