• February
    17
    Monday

Main Area

Main



காதலர் தினத்தில் காதலியுடன் கொண்டாட்டம்...மனைவியின் கையில் சிக்கிய கணவர்!

மனைவி- கணவர்
மனைவி- கணவர்

காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய கணவரை மனைவி கையும்  களவுமாக பிடித்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. 

உலக முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் தனது  கணவர் வேறொரு பெண்ணுடன் செல்வதை பார்த்துள்ளார் மனைவி. உடனே அவர்களை விரட்டி பிடித்த அந்த பெண், நடுரோட்டில் கணவனை நிற்கவைத்து சகட்டுமேனிக்கு வார்த்தைகளாலேயே  அர்ச்சனை செய்துள்ளார். 

ttn

இதையடுத்து  சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், எங்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் தான் ஆகிறது. இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வரை மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். தற்போது அவர் ,மாறிவிட்டார் என்று கூறி அழுதுள்ளார். கணவனோ, காதலர் தினம் அதனால் காதலியை வெளியில் அழைத்து  சென்றேன் என்று கூலாக பதில் சொல்ல மீண்டும் அவர்களுக்குள் பிரச்னை தொடங்கியுள்ளது. 

yttn

இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் அங்கு வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் - மனைவி சமாதானம் ஆகவில்லை என்றால்  மனைவி கொடுக்கும் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.