கணவன் இறந்துவிடுவார் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்த மனைவி! உயிர்பிழைத்ததால் காதலனுடன் ஆடிய நாடகம் அம்பலம்!

 

கணவன் இறந்துவிடுவார் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்த மனைவி! உயிர்பிழைத்ததால் காதலனுடன் ஆடிய நாடகம் அம்பலம்!

தூங்கிக்கொண்டிருந்த கணவன் கட்டிலில் இருந்து விழுந்து அடிபட்டதாக சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்த்த மனைவி மீது போலீசுக்கு சந்தேகம் வந்து விசாரித்தபோது, கள்ளக்காதலுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டது அம்பலமாகி இருக்கிறது.

கணவன் இறந்துவிடுவார் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்த மனைவி! உயிர்பிழைத்ததால் காதலனுடன் ஆடிய நாடகம் அம்பலம்!

மதுரையை சேர்ந்த முகமது யாசின் ஏற்கனவே திருமணமானவர் என்றும் தெரிந்தும் நாகர்கோவிலை சேர்ந்த காயத்ரி காதலித்து வந்துள்ளார். நாகர்கோவிலில் மழலையர் பள்ளி தொடங்கியிருந்த யாசின், அப்பள்ளியில் காதலி காயத்ரியை மேலாளராக ஆக்கிவிட்டார்.

யாசினுடன் பழகும் விவகாரம் தெரிந்ததும், கொதித்துபோன காயத்ரி குடும்பத்தினர் அவசர அவசராம அவரை கணேஷ் என்ற இளைஞருக்கு கல்யாணம் செய்து கொடுத்துவிட்டனர். இதற்கிடையில் யாசினும் மதுரைக்கே சென்றுவிட்டார்.

திருமணத்திற்கு பிறகும் யாசினை மறக்க மனசில்லாமல், அவருடன் தினமும் கணேஷுக்கு தெரியாமல், பெரும்பாலும் கணேஷ் தூங்கிய பிறகு செல்போனில் பேசி வந்துள்ளார் காயத்ரி. அடிக்கடி நாகர்கோவிலுக்கும் வந்து காயத்ரியை சந்தித்துவிட்டு சென்றுள்ளார் யாசின்.

கணவன் இறந்துவிடுவார் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்த மனைவி! உயிர்பிழைத்ததால் காதலனுடன் ஆடிய நாடகம் அம்பலம்!

இந்த நிலையில் யாசினுக்கு பணம் தேவைப்பட்டதால் , தனது வீட்டை அடமானம் வைத்து 10 லட்சம் கொடுத்திருக்கிறார் காயத்ரி. இது தெரிந்து, காயத்ரியிடம் விசாரித்திருக்கிறார் கணேஷ்.

இதில் அதிர்ச்சியான காயத்ரி, யாசினிடம் விவரத்தை சொல்ல, கணேஷை கொன்றால்தான் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும் என்று முடிவெடுத்து, கூலிப்படையை ஏவி கணேஷை கொல்ல திட்டமிட்டனர்.

நான்குவயதில் குழந்தை இருக்கிறது என்பதை கொஞ்சமும் யோசிக்காமல் கணவனை கொல்ல முடிவெடுத்திருக்கிறார் காயத்ரி.

தூங்கும்போது கூலிப்படையினர் மூன்று பேர் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் கணேஷ். இதில் பேச்சு மூச்சில்லாமல் போன கணவனை மருத்துவமனையில், தூங்கும்போது கட்டிலில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு விட்டது என்று சொல்லி சேர்த்திருக்கிறார். கணவன் எப்படியும் இறந்துவிடுவார் என்றே மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

கணவன் இறந்துவிடுவார் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்த மனைவி! உயிர்பிழைத்ததால் காதலனுடன் ஆடிய நாடகம் அம்பலம்!

சுயநினைவு திரும்பாத நிலையில், கணேஷுக்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. கட்டிலில் இருந்து கீழே விழுந்தவருக்கா மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது என்று சந்தேகித்த டாக்டர்கள் போலீசுக்கு புகார் கொடுக்க, சில நாட்கள் கழித்து உடல் நிலை சரியான கணேஷிடம் விசாரித்தபோது, தூக்கத்தில் யாரோ என்னை அடித்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

காயத்திரியிடம் விசாரித்ததில், நடந்த உண்மையை ஒப்புக்கொண்டார். இதன்பின்னர், காயத்திரியும் கூலிப்படையினர் கருணாகரன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த முகமது யாசினை இரண்டு மாதங்களூக்கு பிறகு இப்போது கைது செய்திருக்கிறார்கள் போலீசார்.