குழந்தையை நூறு ரூபாய்க்கு கூவி விற்க வைத்த கொரானா -ஊரடங்கால் உருக்குலைந்த பெண்ணின் வாழ்க்கை

குழந்தையை நூறு ரூபாய்க்கு கூவி விற்க வைத்த கொரானா -ஊரடங்கால் உருக்குலைந்த பெண்ணின் வாழ்க்கை

ஒரு இளம் பெண் தன்னுடைய 10 நாள் குழந்தையை, ஊரடங்கு உண்டாக்கிய வறுமையால் நூறு ரூபாய்க்கு விற்ற கொடுமை நடந்துள்ளது .

குழந்தையை நூறு ரூபாய்க்கு கூவி விற்க வைத்த கொரானா -ஊரடங்கால் உருக்குலைந்த பெண்ணின் வாழ்க்கை

கொரானா வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கம் விதித்த ஊரடங்கால் கடந்த ஆறு மாதமாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார் .ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் வசிக்கும் அந்த 25 வயது தாய் ஒரு சாலையோர கடையில் வேலை பார்த்து வந்தார் .இந்த ஊரடங்கு காரணமாக அந்த கடை பூட்டபட்டதால் அவருக்கு வேலையில்லாமல் போனது .இதனால் அவரின் 10 நாள் குழந்தையையே வளர்க்க முடியாமல் சிரமத்திக்கு ஆளானார் .அதனால் அவரின் குழந்தையை அவர் விற்று விட முடிவு செய்தார் .அதனால் அவர் தனக்கு தெரிந்த ஒரு தம்பதிக்கு வெறும் நூறு ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த குழந்தையை விற்றுள்ளார் .
இந்த விஷயம் போலீசுக்கு எப்படியோ தெரிந்து விட்டது ,அதனால் அவர்கள் அந்த குழந்தையை விற்ற பெண்ணை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள் .அப்போது அவர் அந்த குழந்தையை வாங்கிய தம்பதியின் விவரங்களை அவர் மூலம் பெற்றார்கள் ,.பிறகு அந்த தம்பதிகளிடமிருந்து அந்த குழந்தையை மீட்டுள்ளனர் .இப்போது அந்த குழந்தை ஒரு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்துள்ளார்கள் .மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

குழந்தையை நூறு ரூபாய்க்கு கூவி விற்க வைத்த கொரானா -ஊரடங்கால் உருக்குலைந்த பெண்ணின் வாழ்க்கை