ஈரோடு மாவட்டத்தில் 2 -வது நாளாக பரவலாக மழை குண்டேரிப்பள்ளத்தில் அதிகபட்சமாக 85 மில்லி மீட்டர் பொழிவு

ஈரோடு மாவட்டத்தில்  2 -வது நாளாக பரவலாக மழை குண்டேரிப்பள்ளத்தில் அதிகபட்சமாக 85  மில்லி மீட்டர் பொழிவு

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது காலை கொளுத்த தொடங்கி மாலை வரை வெயில் வெளுத்து வாங்கியது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர் இதேபோல் வீடுகளில் குழந்தைகள் பெரியவர்கள் வரை அனைவரும் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது

ஈரோடு மாவட்டத்தில்  2 -வது நாளாக பரவலாக மழை குண்டேரிப்பள்ளத்தில் அதிகபட்சமாக 85  மில்லி மீட்டர் பொழிவு

இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்துள்ளது மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் 85 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது பவானிசாகர் சத்தியமங்கலம் தளவாடி நம்பியூர் சென்னிமலை கொடிவேரி போன்ற பகுதியில் பலத்த மழை பெய்தது ஈரோடு மாநகரில் நேற்று பரவலாக மழை பெய்தது ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு குண்டேரிபள்ளம் 85 தாளவாடி 69 நம்பியூர் 39 சென்னிமலை 36 பவானிசாகர் 32.8 கோபி 28 கொடிவேரி 22 சத்யமங்கலம் 20 வரட்டுப்பள்ளம் 11.4 ஈரோடு 11 மொடக்குறிச்சி கொடுமுடி 9.8 பெருந்துறை 7 பவானி 5 கவுந்தபாடி 4

ஈரோடு மாவட்டத்தில்  2 -வது நாளாக பரவலாக மழை குண்டேரிப்பள்ளத்தில் அதிகபட்சமாக 85  மில்லி மீட்டர் பொழிவு

செய்தி;ரமேஷ்கந்தசாமி