ஜோ பைடனுக்கு இந்த நாடு வாழ்த்து சொன்னால் ஏன் அதிர்ச்சியா பார்க்கிறாங்க?

 

ஜோ பைடனுக்கு இந்த நாடு வாழ்த்து சொன்னால் ஏன் அதிர்ச்சியா பார்க்கிறாங்க?

அமெரிக்காவில் அடுத்த அதிபர்  ஜோ பைடன் என்பதில் எந்தத் தடையும் இனி இல்லை. ஆம், நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்ப்பில் போட்டியிட்ட ஜோ பைடனை எதிர்த்து நின்றார் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப். பலரும் கணித்ததுபோலவே ஜோ பைடன் அதிரடி வெற்றி பெற்றார்.

ஆனால், ட்ரம்ப் இந்தத் தேர்தலில் குளறுபடிகள் நடந்ததால், மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றம் சென்றார். ஜியார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பைடன் வென்றது மறுபடியும் உறுதிபடுத்தப்பட்டது. அதனால், தன் நிலையிலிருந்து கீழிறிங்கி வந்தார் ட்ரம்ப்.

ஜோ பைடனுக்கு இந்த நாடு வாழ்த்து சொன்னால் ஏன் அதிர்ச்சியா பார்க்கிறாங்க?

தற்போது ட்ரம்பிடம் உள்ள அதிகாரங்களை, ஜோ பைடனுக்கு மாற்றும் பணிகளுக்காக குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அதற்கு ட்ரம்ப் தரப்பில் ஒத்துழைப்பு தர வில்லை. நீதிமன்றங்களி உத்தரவுகள், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளால் ட்ரம்ப் தற்போது அதிகார மாற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர முடிவெடுத்திருக்கிறார்.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபருக்கு சீன நாட்டின் அதிபர் ஜிங்பிங் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியாகப் பலரால் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அமெரிக்காவின் எதிரி நாடாகவே சீனா கருதப்படுகிறது.

ஜோ பைடனுக்கு இந்த நாடு வாழ்த்து சொன்னால் ஏன் அதிர்ச்சியா பார்க்கிறாங்க?
Foto: Adnilton Farias/VPR

ட்ரம்பும் தனது பிரச்சாரத்தின்போது ஜோ பைடன் வென்றால் அது சீனாவின் வெற்றி என்று அடிக்கடி சீனாவை வம்புக்கு இழுத்து வந்தார். சீனாவி ஆப்களைத் தடை செய்வதில் மும்முரமாக இருந்தார் ட்ரம்ப். ஜோ பைடனை சீனாவின் ஆள் என்று காட்டி, அமெரிக்கர்களின் ஓட்டுகளைப் பெற முயற்சி செய்தார் ட்ரம்ப். ஆனால், முடிவு பைடன் பக்கம் இருந்தது. இதனால், சீன அதிபரின் வாழ்த்து அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் பார்க்கப்படுகிறது. ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் சீனா – அமெரிக்கா நாடுகளிடையே நல்லுறவு ஏற்படும் எனச் சிலர் தெரிவிக்கின்றனர்.