கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்? அமைச்சர்கள் விளக்கம்!

 

கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்? அமைச்சர்கள் விளக்கம்!

இன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி மற்றும் உழைப்பாளர் தினங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன் படி, அக். 2(இன்று) காந்தி ஜெயந்தியையொட்டி, ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என அரசு அறிவித்திருந்த நிலையில், நேற்று இரவு திடீரென கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியானது.

கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்? அமைச்சர்கள் விளக்கம்!

ஏற்கனவே கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவிருந்த கிராம சபை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதும் ரத்தாகியது குழப்பத்தை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்? அமைச்சர்கள் விளக்கம்!

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, கிராம சபைக் கூட்டங்களில் இத்தனை பேர் தான் வரலாம் எனக் கட்டுப்பாடு விதிக்கமுடியாது என்பதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் இதன் பின்னணி அரசியல் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பல சவால்கள் இருந்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விளக்கம் அளித்தார்.