சென்னை ஆடிட்டரை கிருஷ்ணகிரியில் கொன்று புதைத்தது ஏன்? கொலையாளிகள் 9 பேர் அளித்துள்ள வாக்குமூலம்

 

சென்னை ஆடிட்டரை கிருஷ்ணகிரியில் கொன்று புதைத்தது ஏன்? கொலையாளிகள் 9 பேர் அளித்துள்ள வாக்குமூலம்

சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கிருஷ்ணகிரி அருகில் மாந்தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் 9 பேரும் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ஆடிட்டரை கிருஷ்ணகிரியில் கொன்று புதைத்தது ஏன்? கொலையாளிகள் 9 பேர் அளித்துள்ள வாக்குமூலம்

சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தவர் ஜெனரஞ்சன் பிரதாப். ஆடிட்டரான இவர் தன்னுடன் பணிபுரிந்து வந்த ஒரு கிருஷ்ணகுமாருடன் கடந்த இருபத்தி ஆறாம் தேதி வேலூருக்கு காரில் சென்றிருக்கிறார். இவர்களுடன் பணிபுரிந்து வந்த சபரிஸ் என்பவர் மற்றொரு காரில் சென்று இருக்கிறார். இரவு 10 மணி அளவில் மனைவி பூர்ணிமாவுக்கு போன் செய்த ஜனரஞ்சன், வேலூரில் வந்த வேலை முடிந்து விட்டது. கிருஷ்ணகிரியில் நாளை ஒரு வேலை இருக்கிறது. அதற்காக அங்கே செல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

மறுநாள் 27ம் தேதி அன்று கணவருக்கு போன் செய்து இருக்கிறார் பூர்ணிமா. ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்திருக்கிறது . இதையடுத்து அவருடன் சென்ற கிருஷ்ணகுமார் சபரிஷ் ஆகியோருக்கு போன் செய்திருக்கிறார். முதலில் அவர்கள் அழைப்பை ஏற்காமல் இருந்திருக்கிறார்கள். தொடர்ந்து போன் செய்த பிறகு அழைப்பை எடுத்த அவர்களும் சரியாக பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள்.

சென்னை ஆடிட்டரை கிருஷ்ணகிரியில் கொன்று புதைத்தது ஏன்? கொலையாளிகள் 9 பேர் அளித்துள்ள வாக்குமூலம்

இதனால் சந்தேகம் வந்த பூர்ணிமா இருபத்தி எட்டாம் தேதி அன்று கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் கிருஷ்ணகுமார், சபரீஷ் இருவரையும் பிடித்து விசாரித்தபோது பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டதால் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர் ஜெனரஞ்சன் உடல் எங்கே என்று கேட்ட போது சாமல்பட்டி அருகே உள்ள மாந்தோப்பில் புதைத்து விட்டதாக சொல்லியிருக்கின்றனர்.

இதை எடுத்து ஆடிட்டரை புதைக்கப்பட்ட இடத்திற்கு போலீசார் இருவரையும் அழைத்துச் சென்றனர் அங்கேயே சாமல்பட்டி அடுத்த கொல்லப்பட்டி அருகே இருக்கும் மாந்தோப்பில் கிருஷ்ணகுமார் புதைக்கப்பட்ட இடத்தை கிருஷ்ணகுமாரும் சபரீஷனும் காட்டினார்கள். பலத்த மழை பெய்ததால் உடலை தோண்டி எடுக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இரவு 10 மணியளவில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது .

ஆடிட்டர் கொலை தொடர்பாக கிருஷ்ணகுமார், சபரிஸ் ஆகியோரிடம் நடத்திய விசாரணயில், கோபிநாத், மணிவண்ணன், திருமால், பிரசாத், லோகநாதன், திருப்பதி உள்ளிட்ட 7 பேர் சிக்கினர். 9 பேரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர் . இதில் வழக்கில் முக்கிய குற்றவாளியான சபரீஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில், பெரம்பலூர் மாவட்டம் ஆரணாரை கிராமத்தில் வசித்து வருகிறேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக சென்னைக்கு சென்று வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு விளம்பரப் படங்கள் எடுக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தேன். அப்போது வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் உடன் நட்பு ஏற்பட்டது. அவர் எனக்கு 35 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறினார். அதற்காக அவரின் நண்பரான ஆடிட்டர் ஜனரஞ்சன்பிரதானை அவனை அறிமுகம் செய்து வைத்தார்.

அவரை சந்தித்தபோது 30 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகவும் அதற்கு முன் கூட்டியே மூன்றரை கோடி ரூபாய் கமிஷன் தர வேண்டும் என்றும் கூறினார். அதன்படியே ஆடிட்டரிடம் மூன்றரை கோடி ரூபாய் கொடுத்தேன் . ஆனால் அவர் கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதற்கிடையில் விளம்பர நிறுவனத்தை காலி செய்துவிட்டு பெரம்பலூருக்கே சென்று விட்டேன்.

சென்னை ஆடிட்டரை கிருஷ்ணகிரியில் கொன்று புதைத்தது ஏன்? கொலையாளிகள் 9 பேர் அளித்துள்ள வாக்குமூலம்

அப்போதுதான் ஐதராபாத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக ஆடிட்டரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நான் சிறைக்கு சென்று ஆடிட்டரை பார்த்து பேசியபோது, என்னை ஜாமீனில் எடுத்தால் உன் பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னதால் அவருக்கு பண உதவி செய்தேன். ஆனால் ஜாமினில் வெளியே வந்த பிறகு அவர் பணத்தை தராமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தார்.

இது குறித்து கிருஷ்ணகுமாரிடம் முறையிட்டேன். அவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு சில கோடி கடன் தேவைப்படுகிறது என்று ஆடிட்டரிடம் சொல்ல அதை நேரில் சென்று பார்த்து விட்டு வரலாம் என்று ஆடிட்டர் கிளம்பினார். அவருடன் நானும் கிருஷ்ணகுமாரும் கிருஷ்ணகிரிக்கு சென்றோம். திருமால் என்பவரின் வீட்டில் எல்லோரும் மது அருந்திக் கொண்டிருந்த போது மூன்றரை கோடி ரூபாய் பணத்தை எப்போது தரப்போகிறீர்கள் என்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து ஆடிட்டரை கொலை செய்துவிட்டோம். பின்னர் அவரை உடலை மாந்தோப்பில் புதைத்து விட்டோம் என்று கூறியிருக்கின்றனர்.

இதன் பின்னர் 9 பேரையும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.