கட்டுங்கடங்காத கூட்டம்… அசந்துபோன டிடிவி – கோவில்பட்டி என ‘அன்றே’ முடிவு!

 

கட்டுங்கடங்காத கூட்டம்… அசந்துபோன டிடிவி – கோவில்பட்டி என ‘அன்றே’ முடிவு!

தமிழக அரசியலில் நொடிக்கு நொடி அதிரடி திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு இணைந்துள்ளது. பேராதரவு கொண்ட தேனி, தஞ்சாவூர் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார். சம்பந்தமே இல்லாமல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார். அங்கு அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு களம் காண்கிறார்.

கோவில்பட்டி தொகுதியை ஏன் என்று தேடிச் சென்றால், தனியார் இதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்த அமமுக பிரமுகர் டிசம்பர் 28ஆம் தேதி அன்றே இதுகுறித்து கூறியிருக்கிறார் என்பதைக் கண்டறிய முடிந்தது. கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமமுக தேர்தல் பிரிவுச் செயலாளரும், கட்சியின் தென்மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பேட்டியளித்த அவர், “வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி தினகரன், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கோவில்பட்டி தொகுதியில் அமமுக நிச்சயமாக வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.

கட்டுங்கடங்காத கூட்டம்… அசந்துபோன டிடிவி – கோவில்பட்டி என ‘அன்றே’ முடிவு!

கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க நாகர்கோவில் செல்லும் வழியில் கோவில்பட்டியில் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பையும் மக்கள் எழுச்சியையும் கட்டுக்கடங்காத கூட்டத்தையும் பார்த்து வியந்துபோன தினகரன் என்னிடம், “எந்தத் தொகுதியில் நிற்கலாம் என சிந்தித்துக் கொண்டிருந்தேன். கோவில்பட்டியிலேயே போட்டியிடலாம் என இப்போது நினைக்கிறேன்” என்று கூறினார். ஒரு முதலமைச்சர் வேட்பாளர் கோவில்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கோவில்பட்டி சிங்கப்பூர் போன்று மாறும். கட்டாயம் நீங்கள் கோவில்பட்டியில் போட்டியிட வேண்டும் என்று அவரிடம் நான் வலியுறுத்தினேன். ஆக தினகரன் இங்கு நிற்பது உறுதி” என்றார்.

கட்டுங்கடங்காத கூட்டம்… அசந்துபோன டிடிவி – கோவில்பட்டி என ‘அன்றே’ முடிவு!

தற்போது இதுதான் நடந்திருக்கிறது. கோவில்பட்டி மக்களின் பெருவாரியான ஆதரவைக் கண்டு பிரமித்துப் போன டிடிவி தினகரன் இன்று அங்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவர் ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய தேனி தொகுதிகள் அல்லது மன்னார்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்றே கூறப்பட்டுவந்தது. இருப்பினும், அவர் ஏற்கெனவே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று கூறியிருக்கிறார். அதனால் மேற்கூறிய ஏதாவது ஒரு தொகுதிகளில் போட்டியிடுவார் அல்லது அதற்கும் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பார்.