உதயநிதிக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை -கொந்தளிக்கும் பாஜக

 

உதயநிதிக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை -கொந்தளிக்கும் பாஜக

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக வரும் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விதிமுறைகள் சமய விழாக்கள் கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. இதனால் வரும் பத்தாம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாக கொண்டாட முடியாத நிலை இருக்கிறது.

உதயநிதிக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை -கொந்தளிக்கும் பாஜக

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலை வைப்பததற்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிராக பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர்.

திருப்பூரில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற இருக்கும் மாரத்தான் போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் பாஜக ஊடக பிரிவு தலைவர் நரேன் பாபு மற்றும் நிர்வாகிகள் இணைந்து ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அதில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் வரும் 5-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் மாரத்தான் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் போட்டியில் காவல்துறை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெருக்கடியான இந்த சூழலில் நிகழ்ச்சிக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் அவர்கள் ஒப்புதலுடன் தான் அழைப்பிதழ் சேர்க்கப்பட்டுள்ளதா? மேலும் இதற்கு பொறுப்பாளர்களாக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது முற்றிலும் விதி மீறலாகும். இதுகுறித்து உரிய விசாரணை போலீசார் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் மக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்படியிருக்கும்போது ஆளுங்கட்சி எம்எல்ஏ நிகழ்ச்சிக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.