’45 மெட்ரிக் டன்’ ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பியது ஏன்?

 

’45 மெட்ரிக் டன்’ ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பியது ஏன்?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக இல்லை. இதன் காரணமாக, ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

’45 மெட்ரிக் டன்’ ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பியது ஏன்?

ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் துடிதுடித்து உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. தமிழகத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் இருக்காது என்றும் உறுதியாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

’45 மெட்ரிக் டன்’ ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பியது ஏன்?

தமிழகத்தில் கொரோனாவுக்கு 79 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆந்திராவில் 53 ஆயிரம் பேரும் தெலுங்கானாவில் 42 ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு அதிக தேவை இருக்கும் போது மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆக்சிஜன் ஆந்திராவுக்கும் தெலுங்கானாவுக்கும் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அண்டை மாநிலங்களில் தேவை ஏற்படும் போது உதவுவது வாடிக்கையான ஒன்று தான். அங்கிருந்து தமிழகத்துக்கு ரெம்சிடெசிவர் உள்ளிட்ட மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்று கூறினார். ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஆலை தான் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.