துரோகம், சூழ்ச்சியால் விலகிய சசிகலா; பாஜகவிடம் எகிறிய எடப்பாடி

 

துரோகம், சூழ்ச்சியால் விலகிய சசிகலா; பாஜகவிடம் எகிறிய  எடப்பாடி

அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று சசிகலா சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளேன்; மக்களை விரைவில் சந்திப்பேன் என்று கூறிய சசிகலா திடீரென தான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்; அதிமுக வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அறிவித்தது நெருக்கடி காரணமாக தான் என்று பலரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். உடல்நிலை காரணமா? திமுக தேர்தலில் வெற்றிபெற்றால் அதிமுக தோல்விக்கு தான்தான் காரணம் என முத்திரை குத்தப்பட்டு விடுமோ என்ற அச்சமா? போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

துரோகம், சூழ்ச்சியால் விலகிய சசிகலா; பாஜகவிடம் எகிறிய  எடப்பாடி

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக – சசிகலாவை அதிமுகவில் இணைக்க படாதபாடு பட்டது. ஆனால் இதையறியாத சசிகலா, பிஜேபி அழுத்தத்தால் தான் தன்னை அதிமுகவில் இணைத்து கொள்ளவில்லை என்பதை உறுதியாக நம்பியுள்ளார். தனது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த ஈபிஎஸ் பாஜக அழுத்ததால் தான் இப்படி செய்கிறார் என்றும் நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்ள முட்டுக்கட்டையாக இருந்தது ஈபிஎஸ் தான் என்பது தாமதமாக தான் சசி கவனத்திற்கு சென்றுள்ளது. சசிகலா யார்? அவருக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம், அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து குழப்பத்தை ஏற்படுத்த முடியாது? சசிகலா இணைப்பு தவிர வேறு ஏதாவது பேசினால் கூட்டணியை தொடரலாம் என திட்டவட்டமாக கூறினாராம். இதை அறிந்த சசிகலா துரோகத்தை எண்ணி கவலையில் ஆழ்ந்துள்ளார். ஒருபுறம் பாஜகவுக்கு அதிமுக கூட்டணி வெற்றி மிக முக்கியம் என்பதால், சசிகலாவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது பாஜக மேலிடம்.

துரோகம், சூழ்ச்சியால் விலகிய சசிகலா; பாஜகவிடம் எகிறிய  எடப்பாடி

அதேபோல் சசிகலாவை அடித்தளமாகவைத்து அமமுகவை தொடங்கிய தினகரனுக்கு மக்களவை தேர்தலில் பல உதவிகளை உள்ளே இருந்து கொண்டே செய்து கொடுத்துள்ளார் சசிகலா. ஆனால் அதிமுகவை இணைத்துக்கொள்ள தயார். முதல்வர் வேட்பாளர் தினகரன் தான் என அறிவிக்க வேண்டும் என்று கூறியது அதிமுகவை கூடுதலாக எரிச்சலடைய செய்துள்ளது.கடந்த சில மாதங்களாகவே தினகரனுடன் சசிகலாவுக்கு சுமுகமான உறவு இல்லாத நிலையில் அமமுக தலைமையில் கூட்டணி என்று அதிமுக – சசிகலாவை இணைய விடாமல் தடுத்தார் என்ற கடுப்பும் சசிகலாவுக்கு உண்டு.

துரோகம், சூழ்ச்சியால் விலகிய சசிகலா; பாஜகவிடம் எகிறிய  எடப்பாடி

அரசியலில் நீர்த்துப்போய்விடக் கூடாது என்பதாலும், அமமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க சொன்னால் அது அதிமுகவுக்கு எதிரானதாக மாறிவிடும். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலா மீதுள்ள எண்ண ஓட்டத்தை மாற்றிவிடும் என்று எண்ணிய சசிகலா இந்தத் தேர்தலில் அமைதியாக இருக்க முடிவெடுத்தே ஒதுங்கியுள்ளார் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.