Home விளையாட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் டீமில் ரோஹித் ஷர்மா நீக்கம் ஏன்?

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் டீமில் ரோஹித் ஷர்மா நீக்கம் ஏன்?

ஐபிஎல் போட்டிகள் செம விறுவிறுப்போடு நடைபெற்று வருகின்றன. இதில் தங்கள் திறமையைக் காட்டும் இளம் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படுவது வழக்கம். அதுபோலவே தற்போது நடந்துள்ளது.

நவம்பர் 27 – லிருந்து ஆஸ்திரேலியா – இந்தியா தொடர் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியா செல்கிறது இந்திய அணி. அதற்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Virat kohli

ஒருநாள் போட்டிக்கான அணி: விராட் கோலி (கேப்டன்) கே.எல்.ராகுல் (vc & wk), ஷிகர் தவான், , ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹிர்திக் பாண்டியா, மயங் அகர்வால், ரவிந்திர ஜடேஜா, சஹல், குல்தீப் யாதவ், பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, தாகூர்.

டெஸ்ட் போட்டிக்கான அணி: போட்டிக்கான அணி: விராட் கோலி (கேப்டன்) கே.எல்.ராகுல் , ரஹானே (vc), மயங் அகர்வால், ப்ரித்திவ் ஷா, ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், சாஹா (wk), ரிஷப் பண்ட் (wk), குல்தீப் யாதவ், பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், முகம்மது சிராஜ்,.

டி20 போட்டிக்கான அணி: விராட் கோலி (கேப்டன்) கே.எல்.ராகுல் (vc & wk), ஷிகர் தவான், , ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, மயங் அகர்வால், ஹிர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (wk), ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சஹல், பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி.

இவர்கள் அல்லாது டெஸ்ட் அணிக்கு கூடுதலாக நடராஜன், நாகர்கோட்டி, இஷால் பெரேல், கார்த்திக் தியாகி ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

Rohit Sharma

இதில் ரோஹித் ஷர்மாவின் பெயர் இல்லாதது பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கிறது. ஏனெனில், ஐபிஎல் போட்டியில் மட்டுமல்ல மற்ற சர்வதேச போட்டிகளிலும் அவர் சிறப்பாகவே ஆடி வருகிறார். சில தினங்களுக்கு முன் ஐபிஎல் போட்டியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. அதனால், அவர் கடந்த இரு போட்டிகளில் ஆடவில்லை. இதை வைத்தே ரோஹித் ஷர்மாவில் உடற்தகுதி சரியில்லை என்பதாக பிசிசிஐ முடிவெடுத்துவிட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஏனெனில், அவரின் ஆட்டத் திறன் அடிப்படையில் அவரை நீக்கியிருக்க முடியாது. உடல்நிலை தகுதி அடிப்படையிலேயே ஆஸ்திரேலியத் தொடரிலிருந்துக்கு நீக்கப்பட்டிருப்பார் என்று தெரிகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான உழைக்க வேண்டும்- ராகுல்காந்தி

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான உழைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி தமிழக...

“சசிகலா வருகையை எதிர்நோக்கி, தமிழகமே ஆவலுடன் காத்திருப்பு” – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

தர்மபுரி சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி தமிழகமே ஆவலுடன் காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். தர்மபுரியில் நேற்று நடைபெற்ற அமமுக சட்டமன்ற தேர்தல் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற...

”பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கினால், ஆர்பிஐ கண்காணிக்க வேண்டும்” – கே.வி.காமத் வலியுறுத்தல் !

இந்தியாவில் பெரு நிறுவனங்களை வங்கித் துறையில் இறங்குவது வரவேற்கத்தக்கது என வங்கித் துறையில் முக்கிய தலைவரான கே.வி.காமத் கூறியுள்ளார். அதேநேரத்தில், கார்பரேட் வங்கிகளை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணிக்க...

தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தென்காசி தென்காசி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த...
Do NOT follow this link or you will be banned from the site!