“அதுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுனீங்க?” – அதிமுகவின் கேள்வியும் பிடிஆரின் பதிலும்!

“அதுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுனீங்க?” – அதிமுகவின் கேள்வியும் பிடிஆரின் பதிலும்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் தேர்தலுக்கு முன்பான வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதாக நிதியமைச்சர் சொல்லியிருந்தார். அதில் மிக முக்கியமான வாக்குறுதியான பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு. பெட்ரோல் மீதான வரி 3 ரூபாயாகக் குறைக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.

“அதுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுனீங்க?” – அதிமுகவின் கேள்வியும் பிடிஆரின் பதிலும்!

இதுதொடர்பாக அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இவைதான் எளிய உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து முறை. இவர்கள் பெட்ரோல் விலை உயர்வினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவுக்குக் குறைக்கப்படுகிறது. பெட்ரோலின் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

“அதுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுனீங்க?” – அதிமுகவின் கேள்வியும் பிடிஆரின் பதிலும்!

இந்த வாக்குறுதி அன்றைய நாள் நள்ளிரவே அமலுக்கும் வந்தது. வாக்குறுதியை நிறைவேற்றும் முன்பே மிகக் கடுமையாக விமர்சித்த அதிமுக, பாஜகவினர் நிறைவேற்றிய பின்பும் விமர்சித்தனர். வாக்குறுதியில் 5 ரூபாய் குறைப்பதாக சொல்லி வெறும் 3 ரூபாய் குறைத்தது ஏமாற்றம் என சொன்ன எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, டீசல் விலையைக் குறைக்காதது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார். தற்போது அதற்கான விளக்கத்தை பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

“அதுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டுனீங்க?” – அதிமுகவின் கேள்வியும் பிடிஆரின் பதிலும்!

இன்றைய பட்ஜெட் விவாதத்தில் அதிமுக சார்பில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், ”பெட்ரோல் விலை மீதான மாநில அரசின் வரிக் குறைப்பால் மாநிலத்தில் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், சிறிய கார்களைப் பயன்படுத்துவோர் என சுமார் 2 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். ஆனால், டீசல் பயனாளிகளுக்கு வேறு வழிகளில் நிவாரணம் வழங்கப்படுகிறது. மீனவர்களுக்கு மானியம், போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம், பேருந்து ஓட்டுநர்களுக்கு வரிச் சலுகை என வெவ்வேறு வழிகளில் சில சலுகைகளை வழங்கி வருகிறோம்” என்றார்.