• February
    22
    Saturday

Main Area

Mainஅசைவ உணவை சாப்பிட்ட பிறகு ஏன் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்கிறார்கள்?

 அசைவ உணவு
அசைவ உணவு

மசூதிக்கு செல்லும் போதோ, சர்ச்சுக்கு செல்லும் போதோ அசைவ உணவுகளை உட்கொண்டு போகக் கூடாது என்று வரைமுறை படுத்தப்படுவதில்லை. ஆனால், நம் இந்து மதத்தில் ஏன், ஆலயங்களுக்குச் செல்லும் போது அசைவ உணவுகளைத் தவிர்க்க சொல்கிறார்கள்?

temple

நாம் கோயிலுக்குச் செல்வது இறைவனை வணங்க தானே, அதற்கு நம்முடைய மனது தூய்மையாக இருந்தால் போதாதா? பிறகு ஏன் நம்  வீட்டு பெரியவர்கள் அசைவ உணவை உண்டு விட்டு ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்று சிறு வயதிலேயே நமக்கு சில வரைமுறைகளைக் கற்று தருகிறார்கள் என்கிற கேள்விகள் பலரின் மனதில் எழுவதுண்டு. 
மற்ற நாகரிகங்களில் எல்லாம் உணவு என்பது உடலில் உயிரை தக்க வைப்பதற்கும், தசைகளை பெருக்கி உடல் பலத்தை அதிகரிக்கச் செய்யும் ஒரு விஷயமாகவே கருதும் வழக்கம் இருக்கிறது. ஆனால் இந்திய கலாச்சாரத்தில் மட்டும் தான் உண்ணும் உணவை இறைவனின் அருட்பிரசாதமாக பாவிக்கும் தன்மை காணப்படுகிறது. 
பழந்தமிழ் இலக்கியங்களிலும் இறவாவரம் தரும் இறைவனின் அருட் பிரசாதம் என்கிற பொருள் தரும் வகையில் உணவு சாப்பிடுவதற்கு அமுது உண்ணல், அமுது செய்தல் என உணவை குறிப்பிடும் சொற்றொடர்கள் அதிகமாக இருக்கின்றன. நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம். பொதுவாக அசைவ உணவுகளை ஜீரணிக்க நம் உடல் உள்ளுறுப்புகள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், மனதளவிலும் அசைவ உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும். கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்து தான் குறிக்கிறது. மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். 

non veg food

இந்தியாவில் இருக்கின்ற அனைத்து இன மக்களும் சித்தர்கள், ரிஷிகள் போன்ற ஆன்மிக பெரியவர்களின் வழித்தோன்றல்களாக இருக்கின்றனர். அத்தகைய சித்தர்களும், ரிஷிகளும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இறையாற்றல் அதிகமாக பெருக்கெடுப்பதற்கு மாமிச உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டிய தெய்வீக நிலையை அடைவதற்கு அசைவ உணவு சாப்பிடுவது பெரும் தடையாக இருப்பதாக ரிஷிகளும், சித்தர்களும் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் யோகம், தியானம் போன்ற கலைகளில் கைதேர்ந்தவர்களான சித்தர்கள், ரிஷிகள் அசைவ உணவு சாப்பிடும் நபர்களின் உடல் மற்றும் மனம் பஞ்ச பூதங்களிலிருந்து வெளிப்படுகின்ற இறை ஆற்றல் நிறைந்த பிராண சக்தியை உள்வாங்கும் நிலையை இழந்து விடுகிறது என்கிறார்கள். குறிப்பாக கோயில்களில் இந்த தெய்வீக பிராண சக்தி அதிக அளவில் நிறைந்துள்ளது. அசைவ உணவு சாப்பிடுவதை அறவே நீக்கியவர்கள், சிறிதளவு சைவ உணவுகளை சாப்பிட்டு கோயில்களுக்கு செல்பவர்களின் உடல் மற்றும் மனம் இந்த சுத்தமான பிராண சக்தியை அதிகம் கிரகித்துக் கொள்ள முடிகிறது என தங்களின் அனுபவத்தின் மூலம் கண்டறிந்தனர்.

non veg

அசைவ உணவுகள் இத்தகைய நன்மை தரும் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும். எனவே தான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள். நமது பாவங்களை போக்கி புண்ணிய பலன்களை பெருக்கி கொள்ள கூடிய உயரிய இடமான கோயில்களுக்கு செல்லும் போது பிற உயிர்களை கொன்று செய்யப்படும் அசைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு கோயில்களுக்கு செல்வதால் ஏற்கனவே செய்த பாவங்களோடு இந்த புதிய பாவம் சேர்வதோடு, ஆற்றல் மிக்க தெய்வங்களின் சாபங்களையும் நமக்கு ஏற்படுத்தி விடும். எனவே முடிந்த வரை கோயிலுக்கு செல்லும் போது அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நன்மைகளை தரும் ஒரு செயலாக இருக்கும். ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்து விட்டு கோயிலுக்குச் செல்வது நல்லது.

god

முனீஸ்வரன், சுடலை மாடன் போன்ற அசைவ உணவு படையல்களை ஏற்கின்ற கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் இருக்கும் ஆலயங்களிலும் கடவுளுக்குப் படைத்த பின்னரே ஆற அமர அசைவ உணவுகளை உட்கொள்கிறோம். தவிர, பெரும்பாலான காவல் தெய்வங்களும், சிறு தெய்வங்களும் திறந்த வெளியிலேயே அமைந்திருக்கின்ற ஆலயங்களில் தான் தரிசிக்கப்படுகின்றன.

2018 TopTamilNews. All rights reserved.