Home தமிழகம் நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் - சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!

நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் – சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!

சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலர்களாக முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர் பணியாற்றினர். அந்தப் பகுதியில் பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை கண்ட இவர்கள், ஊரடங்கு காலத்தில் எப்படி கடையைத் திறக்கலாம் எனக் கூறி அங்கிருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு வரும்படி கூறியுள்ளனர். பின்னர், அங்கு வந்த உதவி ஆய்வாளர், காவலர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பிறகு பணத்தை எண்ணி பார்த்த கடை உரிமையாளர், 5 லட்சம் ரூபாய் குறைந்ததைக் கண்டறிந்தார்.

நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் - சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!
கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்பவர்கள் தப்ப முடியாது - சென்னை பெருநகர காவல்  ஆணையர் சங்கர் ஜிவால் | Rowdies can't escape says Chennai Metropolitan  Police Commissioner ...

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது. போலீசார் இருவரும் பணத்தை பாக்கெட்டில் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

பேப்பர் பென்சில் கூட இல்லை.. பரிதாபத்தில் மாநில மனித உரிமை ஆணையம்.. -  Sathiyam TV

பணத்தை திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யாதது ஏன்? காவலர்களுக்கு எதிராக வழக்கு பதிந்து, கைது நடவடிக்கை எடுக்காத காவல் நிலைய ஆய்வாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்பது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு, மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நகைக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காவலர்கள் - சென்னை காவல் ஆணையருக்கு அதிரடி உத்தரவு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஒலிம்பிக்ஸ் 2021: டென்னிஸில் நாக்அவுட்டாகி வெளியேறியது சானியா மிர்சா ஜோடி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல்களையும் தாண்டி சவாலுடன் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகிறது. 205 நாடுகளில் இருந்து 11,300 வீரர், வீராங்கனைகள்...

இளம்பெண் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு… கொடூரமாக கொலை செய்த இளைஞர்!

பட்டுக்கோட்டை அருகே ஒரு தலைக் காதல் விவகாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்...

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; அதிர்ச்சி தரும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 535 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள்...

சிக்கினார் அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர்… சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!

போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது 55% அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்...
- Advertisment -
TopTamilNews