Home விளையாட்டு கிரிக்கெட் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுத்தது ஏன்? - மும்பை அணி கூறும் காரணம்!

அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுத்தது ஏன்? – மும்பை அணி கூறும் காரணம்!

ஐபிஎல் ஏலத்தைப் பொறுத்தவரை அதிக விலைக்கு ஏலம் போன கிரிஸ் மோரிஸை விட அர்ஜுன் டெண்டுல்கர் குறித்தே அதிக பேச்சு எழுந்துள்ளது. கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சினின் மகன் என்றதால் அவரை மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அக்மார்க் நெப்போட்டிசம் என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அதற்குப் பலம் சேர்க்கும் வகையில் அர்ஜுனின் பெர்பார்மென்ஸும் கொஞ்சம் மோசமாகவே இருந்துள்ளது.

Image result for arjun tendulkar

நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் 7 ஓவர்கள் வீசி 67 ரன்களை வாரி வழங்கியிருக்கிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளாரான அவர் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். மும்பை அணியின் நெட் செசனின் தவறாமல் அர்ஜுன் ஆஜராகியிருக்கிறார். இங்கிலாந்துக்கு டூர் சென்றிருக்கிறார் என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவ்வளவு திறமையில்லாத ஒரு வீரரை ஏன் ஏலத்தில் எடுக்க வேண்டும் என்றே கேட்கிறார்கள்.

Image result for arjun tendulkar

மும்பை அணியைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு அளித்த கொடைகள் ஏராளம். துல்லியமாகத் திறமைகளைக் கண்டுணர்ந்து அறியா முகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்கள் தான் பின்னாளில் இந்திய அணியின் முக்கிய வீரர்களாகத் திகழ்ந்திருக்கின்றனர். உதாரணம் ஹர்திக் பாண்டியாவும் பும்ராவும். அவ்வாறு செய்த ஒரு அணி நிர்வாகம் ஏன் அர்ஜுன் டெண்டுல்கரை எடுத்தது என்ற கேள்வி முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. தந்தை சிறந்த வீரர் என்பதற்காக அவரின் மகனை நன்றாக விளையாடா விட்டாலும் வாங்குவது நெப்போட்டிசம் தானே என்கிறார்கள்.

Image result for arjun tendulkar

இதற்குப் பதிலளிக்கும் விதமாக மும்பையின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே பேசியிருக்கிறார். இதுதொடர்பாகப் பேசிய அவர், “திறமையின் அடிப்படையில் மட்டுமே அர்ஜுனை நாங்கள் ஏலத்தில் எடுத்தோம். அவர் சச்சினின் மகன் என்ற அடிப்படையில் அவரை வாங்கவில்லை. கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவானின் மகன் என்ற பெரிய சுமை அவர் தலையில் சுமத்தப்பட்டிருப்பது உண்மை தான்.

Image result for mahela jayawardene mumbai

அதிருஷ்டவசமாக அவர் பேட்ஸ்மேனாக இல்லாமல் பந்துவீச்சாளராக இருக்கிறார். அவர் மீது அதிகமான அழுத்தம் போட நாங்கள் விரும்பவில்லை. அவர் திறமையை வெளிப்படுத்த கொஞ்ச காலம் அவருக்கு வழங்க விரும்புகிறோம். தன்னுடைய மகனின் பந்துவீச்சைப் பார்த்து சச்சின் நிச்சயம் பெருமைப்படுவார்” என்று கூறியிருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி முக ஸ்டாலின்

ஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள்,...

மதுரை அருகே பாம்பு கடித்து, 10 வயது சிறுவன் பலி!

மதுரை மதுரை அருகே தோட்டத்தில் விஷப்பாம்பு தீண்டியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பணமூப்பன்பட்டி...

கோடையில் நீரிழப்பு பிரச்சினையை தவிர்க்க, இதை குடிங்க போதும்!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கால கட்டத்தில், நோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை கடைபிடித்து...

“கொடுக்குற சீட்ட வாங்கிக்கோ… இல்லனா கிளம்பு” – அதிமுக, திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது?

கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது என அவலக்குரல்கள் கூட்டணிக் கட்சிகளிடையே எழ ஆரம்பித்திருக்கின்றன. வெளியே கத்திச் சொன்னால் கிடைக்கிற சீட்டும் கிடைக்காமல் போகும் என அஞ்சி உள்ளுக்குள்ளேயே...
TopTamilNews