கூல் கேப்டன் தோனியின் கிரிக்கெட் ஓய்வு நாள் -ஆகஸ்ட் 15-நேரம் 19:29-இதற்கு கற்பனையை கொட்டிய நெட்டிசன்கள்.

 

கூல் கேப்டன் தோனியின் கிரிக்கெட் ஓய்வு நாள்  -ஆகஸ்ட் 15-நேரம் 19:29-இதற்கு கற்பனையை கொட்டிய நெட்டிசன்கள்.

இந்திய கிரிக்கெட் வீரர் கூல் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15ம் தேதியன்று இரவு 19;29க்கு தன்னுடைய ஓய்வு பெரும் திட்டத்தை அறிவித்ததற்கு பின்னால் இருக்கும் ரகசியம் பற்றி நெட்டிசன்கள் பலர் தங்களின் கருத்துக்களையும் கற்பனைகளையும் வெளியிட்டுள்ளனர் ,அவற்றுள் சில சுவாரஸ்யமானவைகளை பார்ப்போம்

ImageImage
தோனியின் ஜெர்சி எண் ‘7’, ரெய்னா இந்தியாவுக்காக ‘3’ எண்ணுள்ள ஜெர்சி அணிந்திருந்தார். இந்த இரண்டு எண்களும் இணைந்தால், அது 73 ஆகிறது. நம் நாடு அதன் சுதந்திரத்தை நிறைவு செய்தும் 73 ஆண்டுகள் ஆகிறது . மேலும் சுரேஷ் ரெய்னா கூட இந்தியக் கொடியின் ஈமோஜியை வெளியிட்டு தோனியின் ட்வீட்டுக்கு பதிலளித்தார் என்று ஒரு நெட்டிசன் குறிப்பிட்டார்
இன்னொருவர் ,கிரிக்கெட் ரசிகர்கள் 2019ம் ஆண்டு ,அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் , இந்தியா தோல்வியடைந்த நேரம் 19-29.அந்த நேரத்தில்தான் தோனி ஓய்வு பெற முடிவு செய்ததாக சில ரசிகர்கள் தெரிவித்தனர், இது அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.
மற்றவர்கள் 1929 ஒரு ‘தேவதை எண்’ என்று சுட்டிக்காட்டினர், இது உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டத்தை அல்லது சுழற்சியை நீங்கள் முடித்துவிட்டீர்கள், என்றனர்
பல கிரிக்கெட் ரசிகர்களும் ‘கிரேட் டிப்ரஷன் 1929’ ஐ எம்.எஸ்.தோனியின் ஓய்வு அறிவிப்பான , சனிக்கிழமை 19:29 மணிக்கு தொடர்புபடுத்தினர்.

Image