“குஷ்பூவை ஏம்பா கூப்பிடல” -எந்த கட்சிக்கு போனாலும் ஓரங்கட்டப்பட காரணம் பயமா ?

 

“குஷ்பூவை ஏம்பா கூப்பிடல” -எந்த கட்சிக்கு போனாலும் ஓரங்கட்டப்பட காரணம் பயமா ?

பிரபல நடிகை குஷ்பூவை எந்த கட்சிக்கு போனாலும் அவர் நடிகையாக இருப்பதால் வளர்ந்து விடப்போகிறார் என்று பயத்தில் அவரை ஒதுக்குவதாக பலர் கூறுகிறார்கள் .

“குஷ்பூவை ஏம்பா கூப்பிடல” -எந்த கட்சிக்கு போனாலும் ஓரங்கட்டப்பட காரணம் பயமா ?

நடிகை குஷ்பு சினிமாவில் வாய்ப்பில்லாததால் பிறகு அரசியலுக்கு வந்தார் ,முதலில் அதிமுகவுக்கு சாதகமாக இருந்தார் .அப்போது ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார் .பிறகு அங்கு அவருக்கு அரசியலில் முதல் மரியாதை கிடைக்காது என்று தெரிந்து கொண்டு திமுக வுக்கு போனார் ,அங்கும் அவருக்கு எதிர்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை ,
அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு போனார் .அங்கு அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவி கிடைத்தது .ஆனால் இங்கிருந்து கொண்டே சமீபத்தில் பாஜகவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார் .அதாவது காங்கிரசிலிருந்து கொண்டே பாஜகவின் புதிய கல்வி கொள்கையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார் இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் அவர் மீது கோபம் கொண்டார்கள்
இதனால் அவர் மீது மேலிடத்திற்கு புகார் தெரிவித்தார்கள் .அப்போது குஷ்பு இது தன்னுடைய சொந்த கருத்து என்று கூறி மழுப்பினார் .இதற்கு முன்பு காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசு கூட இவர் மீது மேலிடத்தில் புகாரளித்துள்ளார் .
அதனால்தான் இன்று நடைபெற்ற வசந்தகுமார் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு அவரை அழைக்கவில்லை ,இந்த சம்பவம் பற்றி அவர் தான் டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாகவும் ,இது தமக்கு அதிர்ச்சி யளிப்பதாகவும் ,காங்கிரஸிலிருக்கும் ஒரே செய்தி தொடர்பாளர் தான் மட்டும்தான் தனக்கு இந்த நிகழ்ச்சி பற்றி தெரியப்படுத்தவில்லை என்று வருத்தத்தோடு குறிப்பிட்டார் .

“குஷ்பூவை ஏம்பா கூப்பிடல” -எந்த கட்சிக்கு போனாலும் ஓரங்கட்டப்பட காரணம் பயமா ?