கருணாநிதிக்கு இதற்காக தான் மெரினாவில் இடம் தரவில்லை? பரப்புரையில் எடப்பாடி விளக்கம்!

 

கருணாநிதிக்கு இதற்காக தான்  மெரினாவில் இடம் தரவில்லை? பரப்புரையில் எடப்பாடி விளக்கம்!

திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரின் உடல் கோபாலபுரத்திலுள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன்பின் 21 குண்டுகள் முழங்க சென்னை மெரினாவில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்க முடியாது என்று அதிமுக அரசு தெரிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றிபெற்று கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்தார்.

கருணாநிதிக்கு இதற்காக தான்  மெரினாவில் இடம் தரவில்லை? பரப்புரையில் எடப்பாடி விளக்கம்!

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி எடப்பாடிகுட்பட்ட வனவாசியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மா இறந்த போது அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தர வேண்டுமென முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் முடியாது என்று மறுத்துவிட்டார். அத்துடன் ராமாவரம் தோட்டத்தில் அவருக்கு இடம் இருப்பதால் அங்கேயே அவரை அடக்கம் செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்த போது அவருக்கும் கருணாநிதி இடம் அளிக்க மறுத்து விட்டார்.

கருணாநிதிக்கு இதற்காக தான்  மெரினாவில் இடம் தரவில்லை? பரப்புரையில் எடப்பாடி விளக்கம்!

காமராஜர் தற்போது முதல்வராக இல்லை ,முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில்தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க வழிவகை இல்லை என்று நாங்கள் கூறினோம். அத்துடன் 150 கோடி மதிப்புள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை நாங்கள் அளித்தோம். ஆனால் அதை வாங்க மறுத்த ஸ்டாலின் நீதிமன்றம் சென்று. நீதிமன்றத்தின் ஆணைப்படி மெரினாவில் அடக்கம் செய்தார். இப்படி இருக்க தந்தைக்கு ஆறடி நிலம் கூட கொடுக்கவில்லை என்று ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்” என்று கூறினார்.