ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன்? – அமைச்சர் பதில்!

 

ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன்? – அமைச்சர் பதில்!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா வரும் 7ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். சசிகலா வருகைக்கு பிறகு அதிமுகவில் பெருங்குழப்பம் ஏற்படும் என்பதை யூகித்த எதிர்க்கட்சிகள், சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றன. சசிகலா சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட தினத்தன்று, ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைத்து அதிமுகவினரை திசை திருப்பியது அதிமுக தலைமை.

ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன்? – அமைச்சர் பதில்!

அதே போல, சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவில்லத்தையும் மூடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளது. இதை விமர்சித்த டிடிவி தினகரன், சீப்பு ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்பதை போல சசிகலாவை ஜெ. நினைவிடத்தில் மீண்டும் சபதம் எடுக்க விடாமல் தடுக்க அதனை மூடியிருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன்? – அமைச்சர் பதில்!

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் சசிகலா வருகையால் ஜெ. நினைவிடம் மூடப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளவும் பாதுகாப்பு கருதியும் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டதாக பதிலளித்தார்.