’’இதுக்கு போய் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யுறாங்க..?’’ -விஜயகாந்த் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டமுடியாமல் திரும்பியவர்களின் முணுமுணுப்பு

’’இதுக்கு போய் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யுறாங்க..?’’ -விஜயகாந்த் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டமுடியாமல் திரும்பியவர்களின் முணுமுணுப்பு

தேமுதிக தலைவர் விஜயாகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

’’இதுக்கு போய் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யுறாங்க..?’’ -விஜயகாந்த் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டமுடியாமல் திரும்பியவர்களின் முணுமுணுப்பு

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் இல்லமாக அரசு அறிவித்து, ஸ்டிக்கர் ஓட்டிவருவது மாநகராட்சியின் முறை. அந்த முறையில் விஜயகாந்துக்கு கொரோனா உறுதியானதால், சென்னை சாலிகிராமம் கண்ணாம்பாள் தெருவில் உள்ள வீட்டின் கேட்டில், ‘தனிமைப்படுத்தப்பட்ட இல்லம்’ என்கிற ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக சென்றனர் மாநகராட்சி அலுவலர்கள்.

ஆனால், விஜயகாந்த் வீட்டில் இருந்தவர்கள் அந்த அலுவலர்களை ஸ்டிக்கர் ஒட்ட விடாமல் தடுத்தனர். ஆனாலும், தங்களது கடமையைச்செய்ய அலுவலர்கள் பிடிவாதமாக இருந்ததால், அவர்களை மிரட்டும் தொணியில் பேசி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு போனைப்போடுங்க என்று அதட்டியதும், அவர்களும் அவ்வாறே செய்து, மேல் அதிகாரிகளுக்கு போன் போட்டு கொடுக்க, அவர்களிடமும் உரத்த குரலிலேயே பேசிவிட்டு, அங்கு வந்த அலுவலர்களிடம் செல்போனை கொடுத்ததும், அவர்கள் வாங்கி காதில் வைத்ததும், ‘’சரி, சார்..சரி, சார்..’’என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டனர்.

’’இதுக்கு போய் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யுறாங்க..?’’ -விஜயகாந்த் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டமுடியாமல் திரும்பியவர்களின் முணுமுணுப்பு

’’கொரோனா காலத்தில் இது ஒரு சாதாரண நடைமுறைதான். இதுக்கு போய் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யுறாங்க?’’ என்று முணுமுணுத்துக்கொண்டே சென்றார்கள் மாநகராட்சி அலுவலர்கள்.