Home அரசியல் "கவனிச்சீங்ளா!"… இப்போ வர்ர விளம்பரத்துல எடப்பாடி போட்டோவே இல்ல… பவரே இல்லையாம்!

“கவனிச்சீங்ளா!”… இப்போ வர்ர விளம்பரத்துல எடப்பாடி போட்டோவே இல்ல… பவரே இல்லையாம்!

வெற்றிநடை போடும் தமிழகமே!

"கவனிச்சீங்ளா!"… இப்போ வர்ர விளம்பரத்துல எடப்பாடி போட்டோவே இல்ல… பவரே இல்லையாம்!

கடந்த மாதம் டிஜிட்டல் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது “வெற்றிநடை போடும் தமிழகமே… ஹே ஹே” என்ற பாடல் தான். தமிழகத்தில் இசை விரும்பிகள் அதிகம் என்பதால் அந்தப் பாடல் அனைவரிடம் ஒற்றிக்கொண்டது. எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தில் வெற்றிநடை போடும் தமிழகமேனு பாடியிருப்போம். விஷயம் அதுவல்ல. அந்த விளம்பர பாடலின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்துவருவது போலவும், இரட்டை இலைக்குப் பதிலாக ஒருபுறம் எடப்பாடியும் மறுபுறம் ஜெயலலிதாவின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தன.

"கவனிச்சீங்ளா!"… இப்போ வர்ர விளம்பரத்துல எடப்பாடி போட்டோவே இல்ல… பவரே இல்லையாம்!

எடப்பாடியால் நிறைந்த விளம்பரங்கள்

இந்த விளம்பரம் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டாலும் இதற்குப் பின் வந்த அனைத்து விளம்பரங்களிலும் எடப்பாடியே நிறைந்திருந்தார். எடப்பாடியார் என்ற சொல்லாடலுடன் அவர் நலத்திட்டங்கள் செய்வது போல விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் ஸ்டாலினையும் எடப்பாடியையும் ஒப்பிட்டு விளம்பரங்கள் வெளிவந்தன. இச்சூழலில் கடந்த இரு நாட்களாக வெளிவந்திருக்கும் புதிய விளம்பரங்கள் எதிலும் எடப்பாடியின் பெயரோ அவரது புகைப்படமோ, வீடியோவோ எதுவும் இல்லை.

எடப்பாடியை தூக்கிவிட்டு இரட்டை இலை வியூகத்துக்கு தாவிய அதிமுக

திமுகவை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்துள்ள அந்த விளம்பரங்களில் எடப்பாடியின் பெயர் துளி கூட வரக் கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறார்கள். குறிப்பாக பழைய விளம்பரங்களில் அதிமுகவின் உயிர்நாடியான இரட்டை இலை பயன்படுத்தப்படவில்லை. அந்த உயிர்நாடி இப்போது வரும் புதிய விளம்பரங்களுக்கு ஆதாரமாக திகழ்கின்றன. ‘எடப்பாடியார்’ என்று வரும் இடங்களில் “தொடரட்டும் வெற்றி நடை… என்றென்றும் இரட்டை இலை” இடம்பிடித்திருக்கிறது. அதேபோல இரட்டை இலையில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தான் இருக்கிறார்கள்; எடப்பாடி இல்லை.

வெற்றிநடை போடும் தமிழகம்

கருத்துக்கணிப்புகளால் ஏற்பட்ட பீதி

இதற்குக் காரணம் கருத்துக்கணிப்புகள் தான் என்று கூறப்படுகிறது. எப்போதும் செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு முன்பு ஒரு கருத்துக்கணிப்பும் பின்னே ஒரு கருத்துக்கணிப்பும் நடத்தும். பெரும்பாலான முந்தைய கணிப்புகள் பொதுமக்களில் பெரும்பான்மையினர் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றன. இரண்டாவதாக எடப்பாடியின் பெயர் அடிபட்டாலும் முதலிடத்தில் ஸ்டாலின் தான் அதிக லீடிங்கில் இருக்கிறார். இந்தக் காரணத்தால் தான் எடப்பாடியை முன்னிறுத்தாமல் இரட்டை இலையைக் கொண்டே விளம்பரங்கள் வெளியிடலாம் என்ற வியூகத்துக்கு மாறியிருக்கிறார்களாம்.

Image

பிரச்சாரத்துக்கு எடப்பாடி வரவே வேண்டாம்… இரட்டை இலை போதும்

இவ்வளவு ஏன் கூட்டணிக் கட்சிகளே முதலில் எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. பெரும் அதிருப்திக்குப் பின் பட்டும் படாமலே அவரை ஏற்றுக்கொண்டனர். இந்த விளைவு மக்களிடையே ஏற்பட்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இது ஒருபுறமிருக்க டெல்டா பகுதிகளில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளின் மனநிலை வேறு மாதிரியாக இருக்கிறது. இரட்டை இலையைக் காட்டியாவது வாக்கு வாங்கி கொள்கிறோம்; தயவுசெய்து எடப்பாடி பிரச்சாரத்துக்கு வர வேண்டாம்; கிடைக்கும் அஞ்சாறு வாக்கும் சிதறிவிடும் என்று அஞ்சுகிறார்களாம்.

எடப்பாடி மக்கள் தலைவரா?

இதனை நிரூபிக்கும் வகையிலேயே அதிமுகவின் தொண்டர்களின் மனநிலையும் இருக்கிறது. எடப்பாடி பிரச்சாரம் செய்யும்போது ஒருவர் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது நெஞ்சில் அதிமுக கொடி குத்தியிருந்த பழம்பெரும் தொண்டர் ஒருவர், “இதையெல்லாம் ஏன் கேக்குற வா போவோம்” என்று கூறி தலையில் அடித்துக்கொண்டு அவரை இழுத்துச் செல்கிறார். (வீடியோவில் 33ஆவது செகண்ட்)

இரட்டை இலை என்ற சின்னத்தையும் எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் விரும்பும் தொண்டர்கள் எடப்பாடி நின்றாலும் இல்லை யார் நின்றாலும் இரட்டை இலைக்குத் தான் போடுவோம் என்ற மனநிலையிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம். எடப்பாடி மக்கள் தலைவராக உருவெடுக்கவில்லை என்பதை இந்தச் சம்பவங்கள் உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

"கவனிச்சீங்ளா!"… இப்போ வர்ர விளம்பரத்துல எடப்பாடி போட்டோவே இல்ல… பவரே இல்லையாம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்தியாவுல ஃபர்ஸ்ட்.. வேர்ல்டுல 11ஆவது – உலகளவில் டிரெண்டாகி மாஸ் காட்டும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அனைத்துவிதமான ஊடக வழியாகவும் நாட்டு மக்களிடம் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பார். சொல்லப்போனால் அதுதான் அவரின் பலமும் கூட. மன்கி பாத் மூலம் வானொலியில் உரையாடுவார். அந்த நிகழ்ச்சி...

வயிற்று வலியால் துடித்த மாணவி.. டாக்டர் சொன்னதை கேட்டு துடித்த பெற்றோர்

பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான பக்கத்துவீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

‘ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய’… அதிமுக முன்னாள் எம்.பி திமுகவில் இணைகிறார்!

அதிமுக முன்னாள் எம்.பி பரசுராமன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து முதல்வரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, பிற கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில்...

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால், பெண்ணை தூண்டிவிட்டு புகார் அளித்தனர்”… கோவை தங்கம் பேட்டி!

கோவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பெண்ணை தூண்டிவிட்டு தன் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக, முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.
- Advertisment -
TopTamilNews