மின்சார கட்டணம் உயர்வு ஏன்? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த விளக்கத்தால் வாயடைத்துப்போன மக்கள்!

 

மின்சார கட்டணம் உயர்வு ஏன்? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த விளக்கத்தால் வாயடைத்துப்போன மக்கள்!

பொதுமுடக்க காலத்திற்கு முந்தைய கட்டணம் அடிப்படையில் மட்டுமே புதிய மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் யூனிட் அடிப்படையில் கட்டணத்தை கணக்கிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணம் உயர்வு ஏன்? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த விளக்கத்தால் வாயடைத்துப்போன மக்கள்!

பொதுமுடக்கத்தால் மின்பயன்பாடு கணக்கிடப்படாத நிலையில், வீடுகளில் முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தை செலுத்தவும், பின்னர் கணக்கிட்டு, ஏற்கனவே செலுத்திய தொகையை கழித்துவிட்டு மீத தொகைக்கு பில் செலுத்த மின்வாரியம் அறிவித்திருந்தது. அதனை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் முந்தைய மின் அளவீட்டின் படி முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி பில்லாகவும், மீத யூனிட்டுகளை தனி பில்லாகவும் நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விசாரணையின் போது, கூடுதல் தொகை செலுத்த மக்களை மின்வாரியம் நிர்பந்திப்பதாக கூறி மனுதாரர் தரப்பில் விளக்க மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. மின்சார சட்ட விதிகளின்படி, பொதுமுடக்கத்தின் போது, முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுமே தவிர ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என திட்டவட்டமாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பொதுமுடக்கத்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததாலும், 18 முதல் 20 மணி நேரங்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்தியதாலும் மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமாக அரசின் விளக்கத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.