கூட்டணியில் நீடிக்க பாமக வீம்பு – விடாமல் அதிமுக துரத்துவது ஏன்?

 

கூட்டணியில் நீடிக்க பாமக வீம்பு  – விடாமல் அதிமுக துரத்துவது ஏன்?

அதிமுக கூட்டணியில் சென்ற பாராளுமன்ற தேர்தலில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் பாராளுமன்ற தொகுதிகளில் தேனியைத் தவிர வேறெந்த தொகுதியையும் இந்தக் கூட்டணியால் வெல்ல முடியவில்லை. ஆனபோதும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அரசைக் காப்பாற்றும் தொகுதிகளைக் கைப்பற்றி விட்டன.

இன்னும் நான்கைந்து மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக தம் கூட்டணியில் இறுதியை நெருங்க வில்லை. அமித் ஷா சென்னை வந்தபோது பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் என அறிவித்தனர். அதனால், அக்கட்சி கூட்டணியில் தொடர்கிறது.

கூட்டணியில் நீடிக்க பாமக வீம்பு  – விடாமல் அதிமுக துரத்துவது ஏன்?

அந்தக் கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சிதான். ஆனால், அது இன்னும் பிடிகொடுக்காமல் இழுத்து வருகிறது. வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுத்தால் மட்டுமே கூட்டணி தொகுதிகள் குறித்துப் பேசுவோம் என்பதாக பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இப்படி பிடிகொடுக்காமல் பேசும் பாமகவை ஏன் அதிமுக துரத்துகிறது. காரணங்கள் இருக்கின்றன.

2019 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் 18 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக – திமுக போட்டியிட்டன. இதில் 17 தொகுதிகளில் திமுக வென்றால் அதிமுக ஆட்சியைக் கவிழ்த்திருக்கலாம். அதிமுக 9 தொகுதிகளில் வென்றால் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.

கூட்டணியில் நீடிக்க பாமக வீம்பு  – விடாமல் அதிமுக துரத்துவது ஏன்?

அதிமுகவுக்கு பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை விடவும், சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளே முக்கியம் என நினைத்தது. அதனால், பாமகவுக்கு 7 தொகுதிகளோடு ஒரு மாநிலங்களவை எம்பி யும் கொடுத்தது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. வட தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு நல்ல பலன் கிடைத்தது. அதிமுக ஆட்சி தக்க வைக்கப்பட்டது.

பல இடைத்தேர்தல்களில் பாமகவின் ஓட்டுகள் அதிமுகவுக்கு கிடைத்தது. உதாரணமாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எடுத்துக்கொள்வோம். 2016 தேர்தலில் திமுக வேட்பாளர் 35 சதவிகிதம். அதிமுக 31 சதவிகிதம் வாக்குகள் பெற்றன. பாமக 23 சதவிகிதம் பெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக வாக்கு சதவிகிதம் சற்று அதிகரித்து 36 சதவிகிதமானது. ஆனால், பாமக வாக்குகள் அதிமுகவுக்குச் சென்றதும் அதிமுக 60 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

கூட்டணியில் நீடிக்க பாமக வீம்பு  – விடாமல் அதிமுக துரத்துவது ஏன்?

பாமகவுக்கு நன்றி கடனாக அதிமுக இப்போது பேசி வருவதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்தத் தேர்தலுக்கும் சேர்த்துதான் மாநிலங்களவை உறுப்பினரை தாரை வார்த்தது அதிமுக. அதனால், இந்தக் கூட்டணியைக் கட்டாயமாக்க நினைக்கிறது.

மேலும், அதிமுக – பாமக கூட்டணி வட தமிழ்நாட்டில் நல்ல பலனைக் கொடுக்கும். குறிப்பிட்ட அளவு வெற்றியைப் பெற உதவும் என அதிமுக தரப்பில் கருதப்படுகிறது. ஒருவேளை பாமக கூட்டணியை விட்டு விலகி, திமுகவோடு சேர்ந்துவிட்டால் பெரிய இழப்பு அதிமுகவுக்குத்தான். அப்படி நடக்க விடக்கூடாது என்று நினைக்கின்றனர்.

கூட்டணியில் நீடிக்க பாமக வீம்பு  – விடாமல் அதிமுக துரத்துவது ஏன்?

இப்போதைய நிலையில் தேமுதிக, பாஜகவுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. பாமக மட்டுமே அதிமுகவுக்கு அடுத்து நிலையான வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சி. எனவே, அதை தவற விட விரும்ப வில்லை. மேலும், பாமக கேட்பது வன்னியர் சாதிக்கான உள் ஒதுக்கீடு அதை நிறைவேற்றும் மனநிலைக்கு அதிமுக வந்துவிட்டதாகவே தெரிகிறது. பாஜக முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் இது சாத்தியம் என்று நினைக்கின்றனர்.

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் அதையே வெற்றியாக எடுத்துக்கொண்டு வன்னியர்கள் ஓட்டுகளை திரட்டி விடலாம் என்று பாமக கணக்குப் போடுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பது தெரிய இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.