இந்தியாவிற்கு ஏன் மீண்டும் லாக்டவுன் அவசியம்?

 

இந்தியாவிற்கு ஏன் மீண்டும் லாக்டவுன் அவசியம்?

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் அதி தீவிரமாக இருக்கிறது. நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துவரும் சூழலில், இந்தியாவில் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. இது ஒருபுறம் என்றால் மருத்துவக் கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டுள்ளது. அவலக்குரல்கள் நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிற்கு ஏன் மீண்டும் லாக்டவுன் அவசியம்?

கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என சொல்லப்படுகிறது. ஆனால் அந்தத் தடுப்பூசிக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே நிதர்சனம். மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். ஆனால் தடுப்பூசி உற்பத்தி தினசரி 20 லட்சம் என்ற நிலையிலேயே இருக்கிறது. இப்படியிருக்கையில் நாடு முழுவதும் எப்படி 130 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எதை மனதில் வைத்து பிரதமர் அந்த அறிவிப்பை வெளியிட்டார் என்றும் தெரியவில்லை.

இந்தியாவிற்கு ஏன் மீண்டும் லாக்டவுன் அவசியம்?

15க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆர்டர் செய்த தடுப்பூசிகள் செல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் சிஇஓ அதர் பூனாவாலா ஜூலை மாதம் வரை தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் என்கிறார். இதனைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு அவசியம் என புகழ்பெற்ற அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் அந்தோணி ஃபாஸி கூறியிருக்கிறார். தற்போது இந்தக் கருத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வழிமொழிந்திருக்கிறார்.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது ஒன்றே தீர்வு. மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனாவால் பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருமானம் உறுதித் திட்டத்தை (NYAY) அறிவித்து ஊரடங்கு அமல்படுத்தலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஏற்கெனவே பொருளாதாரத்தில் நசிந்து போயிருக்கும் மக்கள் மீண்டும் ஒரு முழு ஊரடங்கை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்விக்கணைகள் ராகுல் காந்தி மீது வீசப்பட்டன.

தற்போது அதற்குப் பதிலளிக்கும் விதமாக மற்றொரு ட்வீட் செய்திருக்கிறார். அதில், “நான் ஏன் முழு ஊரடங்கு தீர்வு என்று சொன்னேன் என்பதை விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் மத்திய அரசின் கொள்கை முடிவுகள் அனைத்துமே தோல்வியடைந்து விட்டன. அவர்களால் சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. கொரோனா வைரஸுக்கு உதவி செய்திருக்கிறார்கள். அதனை இப்போது கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. இந்தியாவுக்கு எதிராக மத்திய அரசு மிகப்பெரிய குற்றம் இழைத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.