கோயிலுக்கு தேங்காய், பழம் ஏன் எடுத்துச் செல்கிறோம்..?

 

கோயிலுக்கு தேங்காய், பழம் ஏன் எடுத்துச் செல்கிறோம்..?


கொரொனோ என்கிற கொடிய தொற்றுநோய் கடவுளையும் விட்டுவைக்கவில்லை.. கடந்த ஆறு மாதங்களாக தரிசனங்களுக்கு தடை விதித்திருந்த நிலையில், தற்போது அனைத்து கோயில்களையும் திறக்கலாம் என அறிவித்தது அரசு. இதனால், நீண்ட கால பிரார்த்தனைகள், பூஜைகள் வழிபாடுகள் இன்றிருப்பதால், நிறைய எதிர்மறை எண்ணங்கள், மன அழுத்தத்துடன் இருந்திருப்பீர்கள். இதனைப் போக்க, நாளை நீண்ட

கோயிலுக்கு தேங்காய், பழம் ஏன் எடுத்துச் செல்கிறோம்..?

மாதங்களுக்கு பிறகு, ஆவணி மாத வெள்ளிக்கிழமை சுபநிகழ்ச்சி நாளில் கோயிலில் தரிசனம் செய்தால் சகல அனுகூலங்களையும் பெறலாம். நீண்ட நாட்கள் கழித்து கடவுளை வழிப்படவிருப்பதால், தேங்காய், பழம், பூ எடுத்துச் சென்று வழிப்படலாம். தேங்காய் உடைப்பதில் உள்ள ரகசியம்:-
கோயிலில் ஏன் தேங்காய் உடைக்கிறோம் என்றால், தேங்காயில் உள்ள தலைப்பகுதியில் மூன்று கண்கள் இருக்கும். அது மனிதனின் மும்மலங்களாகிய ஆணவம், கண்மம் மற்றும் மாயை ஆகியவற்றைக் குறிக்கிறது. இதை

கோயிலுக்கு தேங்காய், பழம் ஏன் எடுத்துச் செல்கிறோம்..?

கோயிலில் உடைப்பதன் மூலம் என்னுடைய மும்மலங்களையும் உன் முன்னே உடைத்தெறிகிறேன் என்பது தான் தேங்காய் உடைப்பதன் பின்னால் இருக்கும் முக்கிய தாத்பர்யம் ஆகும். அதேபோல் அந்த மூன்று கண்களும் லட்சுமி, சிவன், பிரம்மன் ஆகியோரைக் குறிப்பதாகவும் நம் முன்னோர்கள் சொல்கிறார்கள்.

தேங்காயும் புராணக்கதையும்:-
சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய முக்கியமான சிறப்பம்சமாகும்.

கோயிலுக்கு தேங்காய், பழம் ஏன் எடுத்துச் செல்கிறோம்..?

விநாயகர் ஒருமுறை தன் தந்தையிடம், “தந்தையே, எனது தலையைக் கொய்தாய் அல்லவா..?
பதிலாக உன் தலையை எனக்கு பலி கொடு..” என்று கேட்க, அப்போது அருகிலிருந்த ஓர் உயரமான மரத்தில் மூன்று கண்களைக் கொண்ட தேங்காயை தனது அம்சமாக சிவபெருமான் படைத்தார் என்கிறது புராணம்.
அழகிய கருத்தும் தேங்காயும்:-
அதுமட்டுமின்றி..
“பொதுவாக தங்களது இரண்டு புறக்கண்களுடன் மனிதர்கள் நல்லனவற்றையே பார்த்து பக்குவப்பட்ட பிறகு, அவர்களது மூன்றாவது கண்ணான அகக்கண் அல்லது ஞானக்கண்ணைப் பெறுகின்றனர். அகநிலையறிதல், தேங்காய்க்கும், மனதிற்கும் பொது..” என்ற அழகிய கருத்தும் உள்ளது.
இதைதவிர, இதில் மருத்துவ ரீதியான ஒரு விஷயமும் அடங்கியுள்ளது.

கோயிலுக்கு தேங்காய், பழம் ஏன் எடுத்துச் செல்கிறோம்..?

பெரும்பாலும் கோயிலுக்குச் செல்லும்போது மன அழுத்தத்துடன் சென்று குறைகளை ஆண்டவனிடம் முறையிடுகிறோம்.. அதுவும், இந்த கொரோனா காலத்தில் மன ரீதியாகவும், பண ரீதியாகவும் மிகவும் மன அழுத்ததுடன் இருப்பதால் கடவுளே உன்னைத்தவிர வேறு யார் எம்மை காப்போர் என்று முறையிட்டு வழிபட, தேங்காய், பழம் கொண்டு அர்ச்சனையும் செய்யலாம்.
பல சமயங்களில் கோயிலில் உடைத்த தேங்காய் மற்றும் பழத்தை உண்ட பின்பே திரும்புகிறோம்..
இதில் என்ன மருத்துவ அறிவியல் இருக்கக்கூடும் என்றால், மன அழுத்தத்தின் போது நமது மூளையின் செரட்டோனின் என்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர் குறைகிறது..
பொதுவாக கோயில்கள் போன்ற அமைதி நிறைந்த இடங்களும், மெல்லிய இசையும் மன அழுத்தத்தை நன்கு குறைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் இந்த செரட்டோனின் உள்ளது. அதிலும் முக்கியமாக தேங்காய் மற்றும் வாழைப்பபழத்தில் இவை அதிகம் உள்ளது என்பதே இதன் சிறப்பு

-வித்யா ராஜா