குடிபோதையில் இருக்கும்போது இங்கிலீஷ் ஈசியா பேசலாமாம்!ஆய்வில் தகவல்

 

குடிபோதையில் இருக்கும்போது இங்கிலீஷ் ஈசியா பேசலாமாம்!ஆய்வில் தகவல்

குடிபோதையில் உள்ளவர்கள் யாரும் செய்யாத பல விசித்திரமான செயல்களில் ஈடுபடுவதை நாம் கவனித்திருப்போம். உதராணமாக கடும் போக்குவரத்து நெரிசல் உடைய சாலையிலும் ஹாயாக காலை நீட்டி, நிதானமின்றி படுத்திருப்பர். ஒரு சிலரோ கடுமையான துர்நாற்றத்திலும் சாக்கடையில் படுத்திருப்பர். மேலும் சிலரோ குடித்துவிட்டால் எல்லாம் தெரிந்த அறிவாளிகள் போல விடாமல் பேசிக்கொண்டே இருப்பர்.

இதேபோன்று குடிபோதையில் இருக்கும்போது பலர் அவர்களை அரியாமலேயே ஆங்கிலத்தை சரளமாக பேசுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதே நபர்கள், மது அருந்தாமல், ஆங்கிலம் பேச தயங்குகிறார்கள். ஆனால் அதே நபர்கள் குடிபோதையில் இருக்கும்போது, ​ ஆங்கிலத்தில் பேசுவதில் வெட்கமோ பதட்டமோ இல்லை.

குடிபோதையில் இருக்கும்போது இங்கிலீஷ் ஈசியா பேசலாமாம்!ஆய்வில் தகவல்

ஒரு நபர் மது அருந்தும்போது, ​​சாதாரண மனிதர்களுடன் ஒப்பிடும்போது அவர் தயக்கமின்றி ஆங்கிலம் பேச முடியும். குடிபோதையில் இருக்கும்போது மற்ற மொழிகளை எளிதில் கற்றுக்கொள்ளலாம் என்பது குறித்த ஆய்வை லிவர்பூல் பல்கலைக்கழகம், இங்கிலாந்து கல்லூரி மற்றும் நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் ஆல்கஹால் குடிப்பதன் மூலம் மொழியியல் புலமை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

50 ஜெர்மன்வாசிகளுக்கு டச்சு மொழியைக் கற்றுக்கொடுத்து, அவர்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் சிலருக்கு ஆல்கஹால் வழங்கப்பட்டது. மேலும் சிலருக்கு வெறும் குளிர்பானம் மட்டும் வழங்கப்பட்டது. இவற்றை குடித்த பிறகு இரு தரப்பினரையும் நெதர்லாந்து மக்களிடம் டச்சு மொழி பேசும்படி அறிவுறுத்தினர். மது அருந்தியவர்கள் வார்த்தைகளை சரியாக உச்சரித்தனர். அவர்களிடையே அந்த மொழியை பேசும்போது எந்த தயக்கமும் இல்லை. ஆய்வின்படி, பொதுவாக வேறு மொழியைப் பேசுவது கடினம் என சொல்லும் மக்கள் குடித்துக்கொண்டே கற்றுக்கொண்டால் எளிதில் வேற்று மொழியை கற்றுக்கொள்ளலாம்.