அதிமுகவிலிருந்து வெளியேறியது ஏன்? சரத்குமார் விளக்கம்!

 

அதிமுகவிலிருந்து வெளியேறியது ஏன்? சரத்குமார் விளக்கம்!

சமகவை அழைத்து அதிமுக பேசும் என காத்திருந்தோம் என்று சரத்குமார் தெரிவித்தார்.

அதிமுகவிலிருந்து வெளியேறியது ஏன்? சரத்குமார் விளக்கம்!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அக்கட்சியிலிருந்து விலகி தற்போது இந்திய ஜனநாயக கட்சியில் கட்சிக் கூட்டணியில் இணைந்துள்ளார்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று அவர் நேற்று அறிவித்தார். இந்த சூழலில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசனை சரத்குமார் மற்றும் ஐஜேகே பொதுச் செயலாளர் ரவி பாபு இருவரும் நேரில் சந்தித்து பேசினர். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என்று கமல் ஹாசன் கூறியதால் கூட்டணி குறித்து அவரிடம் பேசினேன். விரைவில் கமலிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். அத்துடன் ஒருமித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவிலிருந்து வெளியேறியது ஏன்? சரத்குமார் விளக்கம்!

தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுகவிலிருந்து விலகியது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 10 ஆண்டுகளாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் இருந்தேன். 10 ஆண்டுகள் மரியாதை, விகிதாசாரம் உள்ளது என்றுதான் அதிமுக உடன் இணைந்து பயணித்தோம்; ஆனால் இப்போது அது இல்லை . சமத்துவ மக்கள் கட்சியை அழைத்து அதிமுக பேசும் என காத்திருந்தோம். ஆனால் அவர்கள் பேசவில்லை.அதனால் கூட்டணியிலிருந்து விலகினோம் என்றார். காலில் விழுந்து கேட்கிறேன், பணம் வாங்கிக் கொண்டு யாரும் வாக்களிக்காதீர்கள் என்றும் அவர் கூறினார்.