தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்? – அண்ணாமலை பேட்டி

தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்?  – அண்ணாமலை பேட்டி

ஈரோட்டில் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்?  – அண்ணாமலை பேட்டி
தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்?  – அண்ணாமலை பேட்டி

முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, ‘’பெரியார் சிலையில் காவி சாயத்தை விஷமிகள் யாரோ பூசி சென்றுள்ளனர். இதற்கு காவியின் அடையாளமாக இருக்க கூடிய பாஜகவை குறை சொல்வது தவறு. இதை அரசியல் ஆக்க வேண்டாம். காவி சாயத்தை பூசியவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்?  – அண்ணாமலை பேட்டி
தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்?  – அண்ணாமலை பேட்டி

பொதுவாகவே அரசியல் படுகொலைகள் அதிகமாக நடக்கும். பிற மாநிலத்தை ஒப்பிடுகையில் தமிழகம் அந்த வகையில் கட்டுக்கோப்பாக உள்ள மாநிலம். தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் ஆங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்?  – அண்ணாமலை பேட்டி

அதிமுக.,வில் முதல்வர் வேட்பாளர் யார்? என அறிவிப்பது அவர்களுடைய பிரச்சனை. பாஜகவில் ஒரே வேட்பாளர் நரேந்திர மோடி தான். நாங்களும் நரேந்திர மோடியை வைத்து தான் ஓட்டு கேட்க போகிறோம். மக்களும் நரேந்திர மோடிக்கு தான் ஓட்டு போடுவார்கள். தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகளுக்கு தேசிய பொறுப்பில் நியமிக்காததற்கு அவர்களை புறக்கணிப்பதாக காரணம் ஆகாது.

தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்?  – அண்ணாமலை பேட்டி
தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்?  – அண்ணாமலை பேட்டி

எச்.ராஜா தேசிய செயலாளராகவும், கேரளா பொறுப்பாளராகவும் இருந்து அவர் பணிகளை முடித்து விட்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. அதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகள் மாநிலத்திற்கு வேண்டும் என்பதால் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாமல் இருக்கலாம். அவர்களுக்கு விரைவில் வேறு பொறுப்புகள் அறிவிக்கலாம். கொரோனாவுக்கு பின் வழிப்பறி கெள்ளைகள் அதிகரிக்கும் என கூறப்பட்டது. ஆனால், தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக தான் நான் பார்க்கிறேன். கொரோனா சூழ்நிலையிலும், பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து நீட் தேர்வை மத்திய அரசு நல்ல முறையில் நடத்தி முடித்துள்ளது. கேரளா அரசு 10ம் வகுப்பு தேர்வை நடத்தி முடித்துள்ளது. கொரோனா தடுப்பூசி வர அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் ஆகி விடும். அதுவரை பள்ளிகள் திறக்காமலேயே இருக்க முடியாது. தமிழகத்தில் சுகாதார முறையை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம். பாட திட்டம் குறைப்பது தொடர்பாக என்னிடம் கருத்துக்கள் இல்லை. சட்டமன்ற தேர்தலில் பாஜ.,க்கு சிறப்பாக இருக்கும். வலுவாக, வேரூன்றி சட்டசபைக்குள் போகும்’’என்று தெரிவித்தார்.

தமிழக பாஜகவினரை மேலிடம் புறக்கணித்தது ஏன்?  – அண்ணாமலை பேட்டி