இந்தியாவுக்குள் எந்த ஊடுருவலும் இல்லை எனில் வீரர்கள் இறந்தது ஏன்… எங்கே? – மோடிக்கு ராகுல் கேள்வி

 

இந்தியாவுக்குள் எந்த ஊடுருவலும் இல்லை எனில் வீரர்கள் இறந்தது ஏன்… எங்கே? – மோடிக்கு ராகுல் கேள்வி

இந்தியாவுக்குள் சீன ராணுவம் நுழையவில்லை, நிலத்தைக் கைப்பற்றவில்லை என்றால் இந்திய ராணுவ வீரர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? அவர்கள் இறந்தது எங்கே என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவுக்குள் எந்த ஊடுருவலும் இல்லை எனில் வீரர்கள் இறந்தது ஏன்… எங்கே? – மோடிக்கு ராகுல் கேள்விஇந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மோடி கூட்டினார். அந்த கூட்டத்தில் பேசிய மோடி, “இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழையவில்லை, ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத் தரமாட்டோம்” என்றார்.
இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் முக்கியமான கேள்வி எழுப்பியுள்ளார். அதில் “பிரதமர் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை சீனாவுக்கு அளித்துவிட்டார். அந்த நிலம் சீனாவுக்குரியது என்றால், இந்திய வீரர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள். அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள்?” என்று கூறியுள்ளார்.

http://


ராகுல் காந்தி எழுப்பும் எந்த ஒரு கேள்விக்கும் மத்திய அரசு, பா.ஜ.க தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படுவது இல்லை. அதைவிடுத்து தனிமனித தாக்குதல் நடத்தி பிரச்னையை திசை திருப்பும் வேலை மட்டுமே நடக்கிறது. தனிமனித தாக்குதலை நிறுத்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.