ஆளுநர் பொறுப்பேற்கும் முன் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்தது ஏன்?இல.கணேசன் விளக்கம்

 

ஆளுநர் பொறுப்பேற்கும் முன் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்தது ஏன்?இல.கணேசன் விளக்கம்

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் இல. கணேசன் வரும் 27 ஏழாம் தேதி அன்று மணிப்பூர் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார். ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு இருபத்தி ஏழாம் தேதி மணிப்பூரில் ஆளுநராக பொறுப்பு ஏற்கிறார்.

ஆளுநர் பொறுப்பேற்கும் முன் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்தது ஏன்?இல.கணேசன் விளக்கம்

ஆளுநராக பொறுப்பேற்க உள்ளதால் பாஜகவில் தான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார் இதற்கான. இதற்கான ராஜினாமா கடிதத்தை சென்னை தி. நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் சென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நேரில் வழங்கியிருக்கிறார்.

இதன்பின்னர் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு 52 காலம் பொதுப் பணியில் ஈடுபட்டிருந்தேன். அதற்கான அங்கீகாரம் இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் குடும்பம் சங்கரமடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டது. அதனால் எனக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதற்காக வந்தேன்’’என்று அவர் தெரிவித்துள்ளார்.