முழுமையாக குணமடையாத வீரரை களம் இறக்கியது ஏன்? – சர்ச்சை #IndVsAus

 

முழுமையாக குணமடையாத வீரரை களம் இறக்கியது ஏன்? – சர்ச்சை #IndVsAus

இதுவரை முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. நேற்று தொடங்கிய மூன்றாம் டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் ஆஸ்திரேலியா அணி.

புகோவ்ஸ்கி, டேவிட் வார்னர் ஓப்பனிங் இறங்கினர். 5 ரன்கள் எடுத்த நிலையில் வார்னைத் தூக்கினார் முகம்மது சிராஜ். லபுஷேன் – புகோவ்ஸ்கி ஜோடி நன்கு ஆடியது. புகோவ்ஸ்கி 62, லபுஷேன் 91 ரன்கள் அடித்தனர். லபுஷேன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார்.

முழுமையாக குணமடையாத வீரரை களம் இறக்கியது ஏன்? – சர்ச்சை #IndVsAus

ஸ்டீவ் ஸ்மீத் நங்கூரம் பாய்ச்சியதைப் போல ஆடிக்கொண்டிருந்தார். சதம் அடித்தும் நிதானமாக நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். அதனால்தான் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எனும் ஸ்கோரை அடைய முடிந்தது.

இப்போது கிளம்பியிருக்கும் சர்ச்சை வேறு. அதாவது இரண்டாம் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி தோற்றதால் டேவிட் வார்னரை கட்டாயப்படுத்தி களம் இறக்கியதாகச் செய்திகள் வெளியாகின.

ஆஸ்திரேலியா – இந்தியா இரு அணிகளுக்கு இடையேனான ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடினார் டேவிட் வார்னர். முதல் போட்டியில் 69 ரன்களையும், இரண்டாம் போட்டியில் 83 ரன்களையும் விளாசியிருந்தார் டேவிட் வார்னர்.

முழுமையாக குணமடையாத வீரரை களம் இறக்கியது ஏன்? – சர்ச்சை #IndVsAus

டேவிட் வார்னர் சிறப்பாக ஆடிய இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இரண்டாம் போட்டியில் அவர் காயம் அடைந்ததால் டி20 போட்டிகளில் ஆட முடியவில்லை. அத்தோடு இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடும் உடல்தகுதியை அவர் அடைய வில்லை.

இந்நிலையில் மூன்றாம் டெஸ்ட் போட்டியில் களம் இறக்கப்பட்ட டேவிட் வார்னர் 8 பந்துகளைச் சந்தித்து 5 ரன்களை மட்டுமே அடித்து, முகம்மது சிராஜ் பந்தில் ஆட்ட மிழந்தார்.

இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. டேவிட் வார்னர் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாமலே போட்டியில் களம் இறக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் பயிற்சியில் ஈடுபடும்போதுகூட 70 சதவிகிதமே குணமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

முழுமையாக குணமடையாத வீரரை களம் இறக்கியது ஏன்? – சர்ச்சை #IndVsAus

இப்படி முழுமையாக குணமடையாத வீரரை ஏன் இறக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கேள்வி. மூன்றாம் டெஸ்ட்டில் வென்றே ஆகவேண்டும் என நிர்பந்தத்தை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நிர்வாகம் தருகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள். இதனால்தான் வார்னரால் முதல் இன்னிங்ஸில் நீண்ட நேரம் நின்று ஆட முடியவில்லை. இந்த முறை சரிதானா என்ற விவாதம் சோஷியல் மீடியாக்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.