டெல்டா மாவட்டங்களில் தூர்வார நிதி ஒதுக்கிவிட்டு கடலூரைப் புறக்கணித்தது ஏன்? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

டெல்டா மாவட்டங்களில் தூர்வார நிதி ஒதுக்கிவிட்டு கடலூரைப் புறக்கணித்தது ஏன்? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்று சேர தூர் வார நிதி ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு கடலூர் மாவட்டத்தைப் புறக்கணித்தது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் என்றால் அதில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் அடங்கும். தற்போது ஜூன் மாதம் மேட்டூர் அணையைத் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசு காவிரி நீர் கடைமடைப் பகுதி வரை சென்று சேர தூர்வார உத்தரவிட்டார். இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. சென்னைக்கு தண்ணீர் வழக்கும் வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. அப்படி இருக்கும்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள காவிரி பாசன பகுதிகளில் தூர்வார நிதி ஒதுக்கப்படவில்லை.

டெல்டா மாவட்டங்களில் தூர்வார நிதி ஒதுக்கிவிட்டு கடலூரைப் புறக்கணித்தது ஏன்? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் பொதுப் பணித்துறை சார்பில் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்கு 67.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இம்மாவட்டங்களில் நிறைவேற்ற வேண்டிய பணிகளின் எண்ணிக்கையையும், இப்பணிகளை மேற்பார்வையிடுவதற்கான அதிகாரிகளின் பட்டியலையும் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் தூர்வார நிதி ஒதுக்கிவிட்டு கடலூரைப் புறக்கணித்தது ஏன்? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி
ஆனால், டெல்டா பாசனப் பகுதியில் முக்கியமான மாவட்டமாக உள்ள கடலூர் மாவட்டம் பட்டியலில் இடம் பெறவில்லை. இம்மாவட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை. பணிகளின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்படவில்லை. தமிழக அரசு இந்த பாரபட்சமான நடவடிக்கைகளைக் கைவிட்டு உடனடியாக கடலூர் மாவட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கி உத்தரவிட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இம்மாவட்டங்களில் நடைபெறும் இந்த தூர்வாரும் பணியில் ஊழல் முறைகேடுகளுக்கு இடம் தராமல் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.