‘ஆடாம ஜெயிச்ச’ நயினார் நாகேந்திரன் : அவசரமாக வேட்புமனு தாக்கல் ஏன்?

 

‘ஆடாம ஜெயிச்ச’ நயினார் நாகேந்திரன் : அவசரமாக வேட்புமனு தாக்கல் ஏன்?

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 20 தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்காடு , ராமநாதபுரம் , மொடக்குறிச்சி, துறைமுகம், ,ஆயிரம் விளக்கு, திருக்கோவிலூர், திட்டக்குடி, , கோயம்புத்தூர் தெற்கு ,விருதுநகர்,அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம் , திருநெல்வேலி,தளி, ,காரைக்குடி, தாராபுரம் தனி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் பாஜக களம் காண்கிறது.

‘ஆடாம ஜெயிச்ச’ நயினார் நாகேந்திரன் : அவசரமாக வேட்புமனு தாக்கல் ஏன்?

இருப்பினும் இன்னும் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்ய அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன், டெல்லிக்கு பயணம் செய்துள்ளார். அந்த வகையில் இன்று இரவு பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.

‘ஆடாம ஜெயிச்ச’ நயினார் நாகேந்திரன் : அவசரமாக வேட்புமனு தாக்கல் ஏன்?

இந்த சூழலில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே தமிழக பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பாளர் பட்டியலுக்கு முன்பே நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது மற்ற பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆடாம ஜெயிச்ச’ நயினார் நாகேந்திரன் : அவசரமாக வேட்புமனு தாக்கல் ஏன்?

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நயினார் நாகேந்திரன், “பாஜக சார்பில் நான் போட்டியிடுகிறேன். அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். வேட்பாளர் பட்டியல் இன்னும் சில மணிநேரங்களில் வெளியாகும். நான் நல்ல நேரத்தை மனதில் வைத்தே முன்கூட்டியே வேட்புமனு தாக்கல் செய்தேன். திருநெல்வேலியில் ஜவுளி பூங்கா உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவேன். அத்துடன் ஏற்கனவே 5 ஆண்டுகள் இந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். நான் செய்த திட்டங்களை நினைவுபடுத்தி மக்கள் மத்தியில் வாக்கு கேட்பேன்” என்றார்.