ராகுல்காந்தி அதிமுகவை விமர்சித்தது ஏன்? – ஜி.கே.வாசன் விளக்கம்

 

ராகுல்காந்தி அதிமுகவை விமர்சித்தது ஏன்? – ஜி.கே.வாசன் விளக்கம்

ஈரோடு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேர்தலுக்காகவே அதிமுக அரசு மீது குற்றம் சுமத்துகிறார் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், ராகுல்காந்தியின் தமிழக சுற்றுப்பயணத்தின் போது, அதிமுக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்துள்ளார் என்றும், இது தேர்தலுக்காகவும், அரசியலுக்காகவும் பேசப்பட்டது என்றும் தெரிவித்தார். மேலும், ஒரு அகில இந்திய தலைவர் வரும்போது அதிககூட்டம் சேர்ந்தது என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல என்றும் வாசன் தெரிவித்தார்.

ராகுல்காந்தி அதிமுகவை விமர்சித்தது ஏன்? – ஜி.கே.வாசன் விளக்கம்

குடியரசு தினத்தன்று நாட்டின் மதிப்பை பாதிக்கும் வகையில் சில சமூகவிரோத சக்திகள் டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் வாசன் கூறினார். மேலும், விவசாயிகள் போராட்டத்திற்கு சுமூக தீர்வு ஏற்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நடைபெற 3 மாதம் இருக்கையில் மக்களிடமிருந்து குறைதீர்ப்பு மனுக்களை பெற உள்ளதாக கூறியுள்ளது வாக்காளர் மத்தியிலேயே வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த வாசன், சசிகலா விடுதலை தமிழகத்தில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்