“கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்த மோடி “

 

“கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்த மோடி “

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம் என்ற அவப்பெயரை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. சுமார் 80 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் சூழலில் சுமார் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னையிலிருந்து ஆந்திரா மற்றும் தெலங்கனாவிற்கு மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கே தினந்தோறும் 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் சூழலில் தமிழக அரசை கேட்காமல் 45 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

“கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்த மோடி “

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுதோல்வி அடைந்து இருப்பது ஏன்? தடுப்பூசி விரயமாவதை தடுத்தல் , ரெம்டெசிவர், ஆக்சிஜனை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். கொரோனா ஏற்பட்டவுடன் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.9300 மெட்ரிக் டன் ஆக்சிசனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்த மோடி “

நிர்வாகத்தில் உலக மகா நிபுணர் என கூறப்பட்ட பிரதமர் மோடி கொரோனா தடுப்பில் படுதோல்வி அடைந்தது ஏன்?; தட்டுப்பாடு நிலவும் சூழலில் 93,000 மெட்ரின் டன் ஆக்சிஜனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்?45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளது வேதனை அளிக்கிறது. கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம் என்ற அவப்பெயரை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.