’’மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் நான் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கல்லை?’’- முதல்வர் விளக்கம்

’’மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் நான் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கல்லை?’’- முதல்வர் விளக்கம்

பாஜக அரசு, எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே விவசாயம் தொடர்பாக மக்களவையில் தாக்கல் செய்துள்ள மூன்று மசோதாக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இந்த மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு அளித்தற்கும் கண்டனம் தெரிவித்துள்ளதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

’’மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் நான் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கல்லை?’’- முதல்வர் விளக்கம்

’’மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம் மற்றும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை தமிழக அரசு ஆதரித்துள்ளது. இவை விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்கள் என்றும், இவை விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இச்சட்டங்கள் வேளாண் விற்பனைக்கூடங்களுக்கும், உழவ சந்தை திட்டத்திற்கும் எதிரானது என்றும், விவசாய்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

’’மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் நான் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கல்லை?’’- முதல்வர் விளக்கம்

அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் இந்த ஒப்பந்த சட்டத்தினை எதிர்க்கிறார்.

மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சட்டங்களினால் தமிழ்நாட்டில் உள்ள விவசாய பெருமகளுக்கு எதிர்பாராத விலை வீச்சியால் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். உறுதியான வருவாய் கிடைக்கும் என்பதை விவசாயி ஆகிய நான் நன்கு உணர்ந்ததால்தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’’என்று அறிக்கையின் மூலமாக தனது விளக்கத்தை தெரிவித்திருக்கிறார்.

’’மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் நான் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கல்லை?’’- முதல்வர் விளக்கம்

மேலும், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலைமை தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்றும், இச்சட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தவோ, பாதிக்கும் வகையிலோ உள்ள ஷரத்துகள் எதுவும் இல்லை என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.