தமிழ்நாட்டில் மட்டும் கொரோனா 2ஆம் அலை கோரதாண்டவம் ஆடியது ஏன்? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் மட்டும் கொரோனா 2ஆம் அலை கோரதாண்டவம் ஆடியது ஏன்? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா முதல் அலை எட்டு மாதங்கள் நீடித்தது. இந்த அலை ஓரளவு குறைந்து வந்தடையடுத்து பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாகப் பெருமிதம் தெரிவித்தார். கொரோனாவை வென்றுவிட்டதாக அவர் சொன்ன ஒருசில மாதங்களிலேயே தனது இரண்டாவது வெர்சனை வெளியேற்றி இந்தியாவை கதறவிட்டது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் தவிப்பு, படுக்கை வசதிகள் பற்றாக்குறை என நாட்டு மக்கள் அனைவரும் அல்லல்பட்டனர்.

தமிழ்நாட்டில் மட்டும் கொரோனா 2ஆம் அலை கோரதாண்டவம் ஆடியது ஏன்? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தான் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியது. அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பாதிப்பு குறைவாகவே இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஏறிய பாதிப்பு, அடுத்ததாக நின்றி விளையாடியது. தினமும் ஆயிரம் என்ற அளவில் தொடர்ந்து அதிகரித்தது. புதிய அரசு பதவியேற்றபோது 30 ஆயிரத்தை நெருங்கியது. அந்தச் சமயத்தில் டெல்லி, மகாராஷ்டிராவில் அதிவேகமாக தொற்று குறைந்தது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் விண்ணை முட்டியது.

தமிழ்நாட்டில் மட்டும் கொரோனா 2ஆம் அலை கோரதாண்டவம் ஆடியது ஏன்? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதற்குப் பிறகு ஊரடங்கு போடப்பட்டு தொற்று பரவல் குறைக்கப்பட்டது. தற்போது 7 ஆயிரத்துக்கு வந்து நிற்கிறது. இதனிடையே தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு தீவிரமாக கொரோனா பரவியது என்பது குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வு மேற்கொண்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,159 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பியது. அதில் தற்போது 554 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகின. அதில் 386 பேருக்கு இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 18.9% 0-12 வயது குழந்தைகளும், 46.1% 18-44 வயது கொண்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக 45 வயதுக்கு மேற்பட்டோரில் 31.6% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 76% குழந்தைகளை இந்த டெல்டா வைரஸ் தாக்கியிருக்கிறது. அடுத்தப்படியாக B.1 என்ற வகை 63 பேரையும் பிரிட்டனில் உருமாறிய ஆல்பா கொரோனா 47 பேரையும் பாதிப்படையச் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் கொரோனா 2ஆம் அலை கோரதாண்டவம் ஆடியது ஏன்? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஒரே பகுதியிலோ, சுப நிகழ்ச்சிகளிலோ பங்கேற்றவர்களில் 30 சதவீதம் பேருக்கும், குடும்பங்களாக 20 சதவீதம் பேருக்கும் டெல்டா கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் கொரோனா இரண்டாம் அலைக்கு டெல்டா வகை கொரோனாவே முழுக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது. இதன் பரவும் வேகமும் தீவிரமும் தான் பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது என்பதும் புலப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் கொரோனா 2ஆம் அலை கோரதாண்டவம் ஆடியது ஏன்? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவையே உலுக்கிய இந்த வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவி மூன்றாம் அலையைத் தொடங்கியிருக்கிறது. அதேபோல இந்த வைரஸிலிருந்து உருமாற்றமடைந்து டெல்டா பிளஸ் என்ற ஒரு உருமாற்ற வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது. இன்னும் ஆறு வாரங்களில் இந்தியாவில் மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் அனைவரும் தீவிரமாக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.