‘தோனி படை’ இந்த ஐபிஎல் சீசனில் எங்கே சறுக்கியது – ஓர் அலசல் #CSK

 

‘தோனி படை’ இந்த ஐபிஎல் சீசனில் எங்கே சறுக்கியது – ஓர் அலசல் #CSK

ஐபிஎல் திருவிழாவை ஒவ்வோர் ஆண்டும் ஆவலோடு எதிர்பார்க்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதற்கு சாட்சியாக, முதல் போட்டியான மும்பை vs சென்னை மோதியபோது 200 மில்லியன் (20 கோடி) பேர் பார்த்திருக்கிறார் என்று சொல்கிறது புள்ளி விவரம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை மூன்று முறை (2010, 2011, 2018) ஐபிஎல் சாம்பியன் கோப்பையைத் தட்டிச் சென்றிருக்கிறது. ஐபிஎல் 2019 ஆம் ஆண்டில்கூட இறுதிப்போட்டியில் ஒரே ஒரு ரன்னில் கோப்பையைத் தவற விட்டது. இதையும் சேர்த்து ஐந்து முறை இறுதிப் போட்டியில் பங்கேற்ற ஓரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே. ஆனால், இம்முறை லீக் போட்டியோடு மூட்டை கட்டி விட்டது. எங்கே நடந்தது இந்தத் தவறு?

‘தோனி படை’ இந்த ஐபிஎல் சீசனில் எங்கே சறுக்கியது – ஓர் அலசல் #CSK

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் உருவாக்கப்பட்டதிலிருந்து ஒரே கேப்டன் தோனிதான். இப்படியான சிறப்பு வேறெந்த அணிக்குமே கிடைத்தது இல்லை. அதைக் காப்பாற்றும் விதத்தில்தான் தோனியின் பங்களிப்பு இருக்கும்.

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ’சீனியர்ஸ்’ டீம் என பலரால் கிண்டல் செய்யப்பட்டது csk. ஆனால், சீனியர் என்பது அனுபவம் மிக்க என்று திருத்தி எழுதி இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார் தோனி. அதனால், இம்முறை விமர்சகர்கள் சீனியர்ஸ் என்பதைக் கிண்டல் செய்யவில்லை. மாறாக, அனுபவம் மிக்க csk டீம் கோப்பையை வெல்லும் என்று பெரும்பான்மையோர் கணித்தார்கள்.

‘தோனி படை’ இந்த ஐபிஎல் சீசனில் எங்கே சறுக்கியது – ஓர் அலசல் #CSK

தோனி எது ஒன்றையும் முறையாகச் செய்ய விரும்புபவர். அதனால்தான், இந்த ஐபிஎல் போட்டி விவரங்கள் அறிவிக்கப்பட்டது, ஆகஸ்ட் 15-20 இடைப்பட்ட தேதிகளில் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானமாகச் சொன்னார். அதை அணி நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது. ஜடேஜா, ஹர்பஜன் சிங் ஆகியோர் வர வில்லை. தோனியின் வலக்கரம் சுரேஷ் ரெய்னா ஆர்வத்துடன் கலந்துகொண்டார். அதற்காக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பலவித கட்டுப்பாடுகளோடு கலந்துகொண்டார்கள்.

ஐக்கிய அமீரகத்திற்குச் சென்றதும் முதல் சோதனையாக, சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தில் நடந்த வன்முறையால் அவர் விலகிக்கொண்டார். cskவுக்கு விழுந்த முதல் அடி இது. அடுத்து, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சொந்த விவகாரங்களால் விலகிக்கொண்டார். அது பவுலிங்கில் cskவை பின்னுக்கு இழுத்தது. ஆயினும் தோனியின் மேஜிக்கை ரசிகர்கள் நம்பினார்கள்.

‘தோனி படை’ இந்த ஐபிஎல் சீசனில் எங்கே சறுக்கியது – ஓர் அலசல் #CSK

முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தோனி, அவரின் வழக்கமான ஸ்டைலில் சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. டூ பிளஸியும் அம்பத்தி ராயுடும் அசத்தலான ஆட்டத்தால் சென்னைக்கு முதல் வெற்றியை ருசியை அளித்தார்கள். சாம் கரண் எதிர்பாராத நேரத்தில் தனது அதிரடியை (6 பந்துகளில் 18 ரன்கள்) வெளிப்படுத்தினார்.

ஆனால், அடுத்த மூன்று போட்டிகள் தொடர் தோல்வி ரசிகர்களை மட்டுமல்ல, வீரர்களையும் சோர்வுக்கு உள்ளாக்கி விட்டது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர் அணியின் தோல்விக்கு காரணமாகி விட்டனர். முரளி ஆரம்பம் முதலே ஃபார்மில் இல்லை. வாட்ஸன் சொதப்பி வந்தார். கேதர் ஜாதவ் கேட்கவே வேண்டாம். நிலையான ஓப்பனிங் வீரர்கள் அமையவில்லை. அதேபோல சுரேஷ் ரெய்னாவின் இடமான ஒன் டவுனிலும் சரியான வீரர் கிடைக்க வில்லை. அம்பத்தி ராயுடு நன்றாக ஆடியபோது காயம் காரணமாகச் சில போட்டிகளிலிருந்து விலகினார். கேதார் ஜாதவ் பந்துகளை எதிர்கொள்வதில் திணறி வந்ததார்.

‘தோனி படை’ இந்த ஐபிஎல் சீசனில் எங்கே சறுக்கியது – ஓர் அலசல் #CSK

தொடர்ந்து கேதார் ஜாதவ்க்கு வாய்ப்பு அளிப்பதாக தோனியின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆயினும் அவருக்கான வாய்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்களை வாட்ஸனும் டூ பிளஸியும் குவித்து வெற்றித் தேடித்தந்தார்கள். அதனால், csk திரும்ப ஃபார்ம்க்கு வந்ததாகப் பேசப்பட்டது. ஆனால், அடுத்த போட்டியான கொல்கத்தாவுடன் மோதும்போது கேதார் ஜாதவ்வால் அணி மோசமாகத் தோற்றது. அந்த போட்டியை வென்றிருந்தால், இப்போது இருக்கும் சூழலில் சென்னை பிளே ஆஃப்க்குச் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கலாம்.

கடும் விமர்சனம் வந்ததால் கேதார் ஜாதவை ஆடும் அணியிலிருந்து விலக்கி வைத்தார் தோனி. அப்போதும் பெங்களூரிடம் தோல்வியே அடைந்தது. ஓப்பனிங் வீரரான ஜெகதீஷனை பின் வரிசையில் ஆட வைத்ததால் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த முடியவில்லை.

‘தோனி படை’ இந்த ஐபிஎல் சீசனில் எங்கே சறுக்கியது – ஓர் அலசல் #CSK

அடுத்த போட்டியில் சாம்கரணை ஓப்பனிங் இறக்கும் விபரீத முடிவை எடுத்தார் தோனி. அவரும் அதிரடியாக ஆடி 31 ரன்களை அடித்து தர, வாட்ஸன், ராயுடுவும் சிறப்பாக ஆட அணி வெற்றி பெற்றது. ஆனால், இந்த டெக்னிக் அடுத்தடுத்து ஆடிய ராஜஸ்தான், டெல்லியிடம் எடுபட வில்லை. சென்னைக்குத் தோல்வியே கிடைத்தது. ஏனெனில், ஒப்பனிங் வீரர் தரும் ஆட்டத்தின் போக்கை ஒருபோதும் அதிரடி ஆட்டக்காரரால் தர முடியாது என்பதே உண்மை.

அதனால், ருத்ராஜ், டூ பிளஸி எனும் ஓப்பனிங்கை அமைத்தார் தோனி. அதற்கு நல்ல பலன் கிடைத்தது. ருத்ராஜ் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் தன்னை நிலைத்துக்கொண்டு, அதன்பின் அடித்து ஆடத் தொடங்கினார். இது ஒருநாள் போட்டியின் பாணி என்றாலும் நன்றாகவே கைக்கொடுத்தது. அதன்பின் நடந்த மூன்று போட்டிகளிலும் சென்னை வென்றது. இவையெல்லாம் பேட்டிங் பக்கம் உள்ளவை. பவுலிங் கதை வேறு இருக்கிறது.

‘தோனி படை’ இந்த ஐபிஎல் சீசனில் எங்கே சறுக்கியது – ஓர் அலசல் #CSK

மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால், ஒரு விஷயம்தான் சென்னையின் சரிவுக்குக் காரணமாக இருந்தது. அது, அணி வீரர்கள் பார்ம்க்கு வர ரொம்ப நாட்கள் எடுத்துக்கொண்டார்கள். டூ பிளஸியும் கடைசி போட்டிகளில் ருத்ராஜ் மட்டுமே நிலையான தொடர்ச்சியான ரன்களை அளித்து வந்தார்கள். ராயுடுவின் பங்களிப்பையும் சொல்லலாம். தோனி இன்னும் மேம்பட்ட ஃபார்மில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

‘தோனி படை’ இந்த ஐபிஎல் சீசனில் எங்கே சறுக்கியது – ஓர் அலசல் #CSK

போனது போகட்டும். ‘மஞ்சள் ஜெர்சியில் இதுதான் உங்களின் கடைசிப் போட்டியா?’ என்ற கேள்விக்கு ‘நிச்சயமாக இல்லை’ என்று தோனி பதில் அளித்திருக்கிறார். மேலும், வலுவான படையோடு அடுத்த ஆண்டில் களம் இறங்குவோம் என்றும் நம்பிக்கையோடு கூறியுள்ளார். நம்பிக்கை வைப்போம். காத்திருப்போம்.