தேர்வு நடத்த ஆயிரம் வழிகள் உள்ளன… நீட் தேர்வுக்கு டெல்லி துணை முதல்வர் எதிர்ப்பு

தேர்வு நடத்த ஆயிரம் வழிகள் உள்ளன… நீட் தேர்வுக்கு டெல்லி துணை முதல்வர் எதிர்ப்பு

தேர்வு நடத்த ஆயிரம் வழிமுறைகள் உள்ளதால், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று டெல்லி கல்வி அமைச்சரும் துணை முதல்வருமான மனிஷ் சோர்டியா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தேர்வு நடத்த ஆயிரம் வழிகள் உள்ளன… நீட் தேர்வுக்கு டெல்லி துணை முதல்வர் எதிர்ப்பு

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு இதை எல்லாம் மீறி ஹால்டிக்கெட் டவுன் லோட் செய்வதைத் தொடங்கிவிட்டது.

தேர்வு நடத்த ஆயிரம் வழிகள் உள்ளன… நீட் தேர்வுக்கு டெல்லி துணை முதல்வர் எதிர்ப்பு

இது குறித்து டெல்லி மாநில துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மனிஷ் சோர்டியாவிடம் கேட்ட போது, “நீட் மற்றும் ஜெ.இ.இ நுழைவுத் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும். தேர்வை நடத்தும் மாற்று வழியைப் பற்றி அது முயற்சிக்க வேண்டும். உலகம் முழுக்க தேர்வு முறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தேர்வை நடத்த 1000க் கணக்கான வழிமுறைகள் உள்ளன. மத்திய அரசு அதை முயற்சிக்க வேண்டும்” என்றார்.

தேர்வு நடத்த ஆயிரம் வழிகள் உள்ளன… நீட் தேர்வுக்கு டெல்லி துணை முதல்வர் எதிர்ப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.