விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தொட்டால் என்ன ஆகும்?

 

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தொட்டால் என்ன ஆகும்?

பொதுவாக ஒரு சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசு, அதற்கெதிரான போராட்டத்தைத் துளியும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. போராட்டம் என்றாலே பாஜகவுக்கு அது வேப்பங்காய் தான். இதுவரை இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக எழும் குரல்களை செவிமடுத்து கேட்டு, அதில் திருத்தங்களைக் கூட மேற்கொள்ளாமல்தான் இருந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட புதிய சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2020 ஜனவரி மாதம் அமலுக்கு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஒட்டுமொத்த நாடே அரசை எதிர்த்தது. அந்தப் போராட்டத்தை மத்திய அரசு எப்படி கையாண்டது என்பது நாடறிந்த ஒன்று. குறிப்பாக, டெல்லி போராட்டக்காரர்களை டெல்லி காவல் துறை எப்படி ஒடுக்கியது என்பதற்கு நம் கண்களே சாட்சி.

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தொட்டால் என்ன ஆகும்?

இந்த இடத்தில் தான் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டெல்லி போலீஸால் ஏன் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை அல்லது ஏன் தயங்குகிறது என்ற கேள்விகள் தன்னிச்சையாக எழுகின்றன.

அதுமட்டுமில்லாமல், முந்தைய சட்டங்களை வாபஸ் பெறுவது என்பது ஆகாத காரியம் என்று கூறிய அரசு, இப்போது விவசாயிகளை அழைத்து திருத்தங்கள் மேற்கொள்கிறோம் என்று இறங்கி வந்திருக்கிறது. என்ன காரணமாக இருக்கலாம்?

57 நாள்களுக்கும் மேலாக போராட்டம் செய்துவரும் விவசாயிகள் சங்கத்தினர், ஜனவரி 26ஆம் தேதி டெல்லி மாநகருக்குள் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். அதற்கான அனுமதியையும் டெல்லி போலீஸிடம் கேட்டிருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தொட்டால் என்ன ஆகும்?

நாமாக ஒரு முடிவெடுத்தால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலை எழும் என எண்ணி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாடியது டெல்லி போலீஸ். விவசாயிகளின் பேரணியை அனுமதித்தால் குடியரசு தினத்தில் அசாம்பாவிதங்கள் நிகழும்; ஆகவே பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியது. எப்படியும் நீதிமன்றம் தடை விதிக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தொட்டால் என்ன ஆகும்?

இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் அரசு அதிகாரிகள் தான் போராட்டத்தை அனுமதிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்; இது ஒரு பிரச்சினையாக நீதிமன்றத்திற்கு தூக்கி கொண்டு வராதீர்கள் என கறாராக கூறிவிட்டது. நீதிமன்ற ஆர்டரை வைத்து காரியம் சாதித்து விட துடித்த டெல்லி போலீஸுக்கு பெரும் பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் டெல்லி போலீஸ் தயங்வதன் பின்னணி என்ன?

ஆரம்பத்தில் இந்த வேளாண் சட்டங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே மத்திய அரசு எண்ணியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்க்கட்சிகளின் தூண்டுதலினால் விவசாயிகள் போராடுவார்கள்; அதைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அவர்களே கலைந்துவிடுவார்கள் என்பதே அரசின் நோக்கம்.

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தொட்டால் என்ன ஆகும்?

ஆனால் நடந்ததோ முற்றிலும் வேறு. விவசாயிகளைப் பாதுகாக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, மண்டிகள் என அவர்களின் அடிமடியிலேயே கைவைத்ததை உணர்ந்த பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் தன்னிச்சையாகவே போராட்டத்தைத் துவக்கினர். இதனை சற்றும் எதிர்பார்த்திராத மத்திய அரசு விவசாயிகளுக்கு மக்களிடமும் பெரும் ஆதரவலை எழுந்ததையடுத்து செய்வதறியாது திகைத்தது.

இதற்கெதிராக அரசுக்கு ஆதரவான விவசாய அமைப்புகளை வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தவைத்தும் பயனில்லை. விவசாயிகள் முன்வைத்த காலை பின்வைக்காமல் வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியே தீர வேண்டும் என்றனர். ஆனால், மத்திய அரசோ முடியாது என அடம்பிடித்தது. 10 சுற்று பேச்சுவார்த்தையிலும் சமரசம் ஏற்படவில்லை.

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தொட்டால் என்ன ஆகும்?

இதற்கிடையே ஒரு வழக்கில், விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்காவிட்டால், தேசிய பிரச்சினையாகி விடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. அது தேசிய பிரச்சினாயகிறதோ இல்லையோ, நிச்சயம் பாஜகவின் அரசியல் சாம்ராஜ்யத்தில் மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தி விடும். போராடுபவர்களில் பெரும்பாலோனோர் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்.

ஹரியானாவில் பாஜக அரசு அமைய காரணமாக இருந்தது ஜனநாயக ஜனதா கட்சி. இந்தக் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் விவசாயி பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால் ராஜினாமா செய்வோம் என்று எச்சரித்துள்ளனர். அப்படி நடக்கும் பட்சத்தில் ஒரு மாநிலத்தையே பாஜக இழக்க நேரிடும். இதேபோல ராஜஸ்தானில் கூட்டணியில் இருக்கும் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியும் எச்சரித்துள்ளது.

விவசாயிகளை எதிர்த்து பஞ்சாபில் பாஜக அரசியல் செய்ய முடியாது என அம்மாநில பாஜக தலைவர்கள் அழாத குறையாக மேலிடத்தில் முறையிடுகின்றனர். இதேபோல பல்வேறு மாநில பாஜக தலைவர்களிடமிருந்தும் கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தொட்டால் என்ன ஆகும்?

இந்தக் காரணம் தான் டெல்லி போலீஸால் விவசாயிகளின் போராட்டத்தின் மீது கைவைக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தை நாடியும் பலனளிக்கவில்லை. அனுமதி கொடுக்காவிட்டாலும் விவசாயிகள் பேரணியைக் கைவிடப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

மீறி பேரணி நடத்தினால் போலீஸ் விவசாயிகள் மீது கைவைக்கும் பட்சத்தில் நீதிமன்றம் கூறியது போல தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும். அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பேரணியை அனுமதித்தால் விவசாயிகளுக்கு மென்மேலும் ஆதரவு பெருகிவிடும்.

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தொட்டால் என்ன ஆகும்?

அங்குட்டும் ஓட முடியாமல் இங்குட்டும் ஓட முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக அகப்பட்டுள்ளது மத்திய அரசு. உச்ச நீதிமன்றமும் Ball is in your court என்று கூறிவிட்டது. எது எப்படியாகினும், பாஜகவின் அரசியல் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியை நிர்ணயிக்க போவதில் விவசாயிகளின் பேரணிக்கு மிக முக்கிய பங்கிருக்கிறது. பார்ப்போம்!