”எதுக்கு போன் பண்றாங்க ? – தெரிஞ்சுக்க ட்ரூகாலர் புது வசதி”

 

”எதுக்கு போன் பண்றாங்க ? – தெரிஞ்சுக்க ட்ரூகாலர் புது வசதி”

நம்மை கைபேசியில் அழைப்பது யார் என்று தெரிந்துகொள்ள உதவும் ட்ரூகாலர் செயலி மூலமாக, அவர் என்ன காரணத்திற்காக அழைக்கிறார் என்பதையும் இனி தெரிந்துகொள்ள முடியும்.

”எதுக்கு போன் பண்றாங்க ? – தெரிஞ்சுக்க ட்ரூகாலர் புது வசதி”

இதற்காக கால் ரீசன் ஃபீச்சர் என்ற சிறப்பு வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, அழைப்பு மேற்கொள்கிறவர்கள் என்ன காரணம் என குறிப்பிட்டுவிட்டு, அழைப்பதன் மூலமாக, அழைப்புகளை பெறுபவர்கள், அந்த காரணத்தை அழைப்பு பெறுவதற்கு முன்பாக தெரிந்துகொள்ள முடியும்.

இதன் மூலம் மிக அவசரமான முக்கிய அழைப்புகளை தவறவிடாமல் எடுத்து பேசிவிடவும் முடியும் என்பதோடு, அவசியமற்ற அழைப்புகளை தவிர்த்து பின்னர் பேச தீர்மானிக்கவும் முடியும் என நிறுவனம் கருதுகிறது. மேலும், ட்ரூ காலர் செயலியிலேயே பிசினஸ் அல்லது நிறுவனம் என டிஃபால்டாக தேர்ந்தெடுக்கும் வசதியும், அதேப்போல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என தேர்வு செய்யும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் மூலமாக அழைப்பு மேற்கொள்ளும் போது இந்த டிஃபால்ட் தேர்வுகளை தேர்ந்தெடுக்கவும், அதை வேண்டாம் என்றால் குறிப்பிடாமல் ஸ்கிப் செயயும் ஆப்ஷனும் தரப்பட்டுள்ளது.

”எதுக்கு போன் பண்றாங்க ? – தெரிஞ்சுக்க ட்ரூகாலர் புது வசதி”

தற்போதைக்கு ஆண்டிராய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் 2021ம் ஆண்டில் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கும் இந்த புதிய வசதி ஏற்படுத்தப்படும் என்று டுரூகாலர் நிறுவனம் தெரிவித்துள்ளநு.

  • எஸ். முத்துக்குமார்