சிறுவர்களைக் கொன்ற அதிகாரிக்கு மன்னிப்பு – தமிழ் கைதிகளுக்கு மறுப்பு ஏன்? – இலங்கை எம்பி ஆவேசம்

 

சிறுவர்களைக் கொன்ற அதிகாரிக்கு மன்னிப்பு – தமிழ் கைதிகளுக்கு மறுப்பு ஏன்? – இலங்கை எம்பி ஆவேசம்

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் முள்ளிவாய்க்கால் சின்னம் அகற்றப்பட்டதை எதிர்த்து தமிழ் மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்டவர் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்னொரு பிரச்சனையும் அங்கே சூடுபிடித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நீண்ட காலம் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

சிறுவர்களைக் கொன்ற அதிகாரிக்கு மன்னிப்பு – தமிழ் கைதிகளுக்கு மறுப்பு ஏன்? – இலங்கை எம்பி ஆவேசம்

தமிழ் மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பேசுகையில், “யாழ்ப்பாணத்தில் 3 சிறுவர்கள் உள்பட எட்டுப் பேரைக் கொன்ற ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்கவுக்கு மரணம் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு இந்த அரசு மன்னிப்பு வழங்கியுள்ளது.

ஆனால், உரிமைக்காகப் போராடிய தமிழ் கைதிகளுக்கு விடுதலை மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த தமிழ் இளைஞர்கள் இந்த நாட்டின் அரசை மாற்ற போராடியவர்கள் அல்ல. தங்கள் இன உரிமைக்காகப் போராடியவர்கள். இறுதியுத்தம் நிறைவடைவதற்கு முன்னரே கைது செய்யப்பட்ட அந்தத் தமிழ் கைதிகள், போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் என்ன தவறு இருக்கப்போகிறது.

சிறுவர்களைக் கொன்ற அதிகாரிக்கு மன்னிப்பு – தமிழ் கைதிகளுக்கு மறுப்பு ஏன்? – இலங்கை எம்பி ஆவேசம்

அரசையே மாற்ற முயற்சி செய்த ஜே.வி.பினருக்கே மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில், தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

விக்னேஸ்வரன் எம்பி குறிப்பிடும் சுனில் ரத்னாயக்க வழக்கு என்பது 2000 ஆம் ஆண்டில் நடந்தது. அந்த வருடத்தில் டிசம்பர் 19-ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள மிரிஸூவில் எட்டுப் பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதில் சிலர் விடுவிக்கப்பட்டாலும், சுனில் ரத்னாயக்கவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பின்னாளில் விடுவிக்கப்பட்டதைத்தான் விக்னேஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார்.