முதல்வர் வேட்பாளரில் பாஜக பிரமுகர்கள் இவ்வளவு குழப்புவது ஏன்?

 

முதல்வர் வேட்பாளரில் பாஜக பிரமுகர்கள் இவ்வளவு குழப்புவது ஏன்?

தமிழ்நாட்டில் இன்னும் ஆறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் படுவேகமாக நடந்து வருகின்றன.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டனியாக திரண்டுள்ளன. இதன் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அதிமுக கூட்டணியில் இதுவரை அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கட்சிகள் இருக்கின்றன. அதிமுகவில் தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியைத் தேர்வு செய்துவிட்டனர்.

முதல்வர் வேட்பாளரில் பாஜக பிரமுகர்கள் இவ்வளவு குழப்புவது ஏன்?

ஆனால், பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் உள்பட பலரும் முதல்வர் வேட்பாளர் பற்றி மாறுபட்ட கருத்துகளைச் சொல்லி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையே இறுதி முடிவு செய்யும்” என்று தமிழக மாநில தலைவர் எல்.முருகன் நெருப்பைக் கொளுத்தி போட்டார். அதற்கு அதிமுக தரப்பில் பதில் சொல்லப்பட்டது.

முதல்வர் வேட்பாளரில் பாஜக பிரமுகர்கள் இவ்வளவு குழப்புவது ஏன்?

ஆயினும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “அதிமுக – பாஜக இந்தக் கூட்டணியில் எவ்வித குழப்பும் பிரச்சனையும் இல்லை. பாஜகவின் தேசிய தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் ஏறு வேலைகளில் பிஸியாக இருந்து வருவதால் தமிழ்நாடு வேட்பாளர் யார் என்பது அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது” என்று சொல்லியிருக்கிறார்.

இந்தப் பட்டியலில் விபி. துரையரசன், குஷ்பு உள்ளிட்டோரும் தம் பங்குக்கு முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். அதிமுகவோடு கூட்டணியோடு என்று பாஜக என்று முடிவானதும் ஏன் இன்னும் முதல்வர் வேட்பாளர் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

முதல்வர் வேட்பாளரில் பாஜக பிரமுகர்கள் இவ்வளவு குழப்புவது ஏன்?

பாஜக தொடக்கத்தில் நம்பியது ரஜினி கட்சி ஆரம்பித்ததும் அதிமுகவை விட்டு விலகி, ரஜினியைப் பிடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தது. ஆனால், ரஜினியின் வெளியிடாத அறிக்கையில் அவரின் உடல்நிலை குறித்த செய்தி அதிர்ச்சி அளித்தது. அதனால், ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று பலரும் நம்ப வில்லை. அதனால்தான் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்துகொண்டனர். ஆனாலும், அமித்ஷா அப்போதும் உறுதியாகப் பெரிதாகப் பேச வில்லை.

இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னதுமே பாஜகவுக்கு மீண்டும் ரஜினியோடு கூட்டணி எனும் ஆசை துளிர் விட்டுள்ளது. அதன் நீட்சியே முதல்வர் வேட்பாளர் எனும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

முதல்வர் வேட்பாளரில் பாஜக பிரமுகர்கள் இவ்வளவு குழப்புவது ஏன்?

இதில் இரண்டு விதமான லாபங்கள் பாஜகவுக்கு இருக்கின்றன. ஒன்று, இப்படி முதல்வர் வேட்பாளர் குழப்பங்களை நிறுத்த தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக தாராளம் காட்டலாம் அல்லது காட்ட வைக்க முயற்சி செய்யலாம். மேலும், துணை முதல்வர் எனும் கோரிக்கையை அழுத்தமாக கேட்கலாம்.

இரண்டு: ஒருவேளை அதிமுக தலைவர்கள் முரண்டு பிடித்தால் ரஜினி கட்சியோடு சென்று கூட்டணி அமைத்துக்கொள்ளும் முயற்சியை மேற்கொள்ளலாம். அதிமுக அல்லது ரஜினி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் பாஜகவுக்கு வளர்ச்சிதான்.