மோடியின் விமானத்தில் சொகுசு படுக்கை எதற்கு? ராகுல்”காண்டு”

 

மோடியின் விமானத்தில் சொகுசு படுக்கை எதற்கு? ராகுல்”காண்டு”

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராகுல் தலைமையில் பஞ்சாபில் டிராக்டர் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியின் போது டிராக்டரில் குஷன் சீட் பொருத்தி ராகுல் பயணித்ததை பா.ஜ.க விமர்சித்தது.

மோடியின் விமானத்தில் சொகுசு படுக்கை எதற்கு? ராகுல்”காண்டு”

இதனையடுத்து அரியானாவின் சிர்சா பகுதியை அடைந்த ராகுல் இதற்கு பதிலளித்து பேசுகையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ‘ஏர் போர்ஸ் ஒன்’

மோடியின் விமானத்தில் சொகுசு படுக்கை எதற்கு? ராகுல்”காண்டு”

விமானம் இருப்பதைக் பார்த்துவிட்டு, பிரதமர் மோடி தனக்கும் அது போல் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானத்தை வாங்கியுள்ளார். டிராக்டரில் குஷன் சீட் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், பிரதமரின் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பல சொகுசு படுக்கைகள் உள்ளன. இது பிரதமருக்கு எதற்கு? வரி செலுத்தும் மக்கள் பணத்தை மோடி வீணடிக்கிறார்’ என்றார். – இர.போஸ்